மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை
13ஆவது சீசன் மகளிர் உலகக் கோப்பை இந்தியா, இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெற்று வரு கிறது. இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலை யில், விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன் னேறிவிடும். ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கும். இதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்பில் தீவிர பயிற்சி யுடன் இரு அணிகளும் களமிறங்குவ தால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா
நேரம் : இரவு 3:00 மணி இடம் : விசாகப்பட்டினம், ஆந்திரா சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஒடிடி)
தில்லி டெஸ்ட் போட்டி கில் சதம் ; இந்தியா 518 ரன்கள் குவிப்பு
2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியா விற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றியை (140 ரன்கள் வித்தியாசத்தில்) ருசித்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி தில்லி யில் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. மேற்கு இந்திய பந்துவீச்சாளர்களின் வலுவான பந்துவீச்சை சமாளித்து தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் - 87, ஜூரல் - 44, நிதிஷ் - 43, கே.எல்.ராகுல் - 38 ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இதில் ஜெய்ஸ்வால் (173), கில்லின் (129) சதமும் அடங்கும். இந்திய அணி முதல் இன்னிங்சில் 134.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்தது. மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் வாரிக்கன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி நிதான வேகத்தில் ரன் சேர்க்க, இந்திய பந்துவீச்சாளர்கள் சீரான வேகத்தில் விக்கெட்டுகளை சாய்த்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியை விட மேற்கு இந்தியத் தீவுகள் அணி 378 ரன்கள் பின்தங்கி உள்ள நிலையில், தொடர்ந்து விடுமுறை நாளான ஞாயிறன்று 3ஆவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
சீனாவின் ஷாங்காய் நகரில், 14ஆவது சீசன் ஷாங்காய் மாஸ் டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆடவ ருக்கு மட்டும் நடைபெற்று வரும் இந்த தொடரின் ஒற்றையர் பிரிவு அரை யிறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசை யில் 4ஆவது இடத்தில் உள்ளவரும், அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வருமான (24) செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரவரிசையில் இல்லாத மொனாகோ நாட்டின் வேலன்டி னை எதிர்கொண்டார். 26 வயதுமிக்க வேலன்டின் பற்றி டென்னிஸ் உலகிற்கு அவ்வளவாக தெரியாது. அவர் புது முக வீரர் என்ற நிலையில், 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச்சை மிக மிக எளிதாக வீழ்த்தி டென்னிஸ் பிரிவில் மட்டுமின்றி ஒட்டுமொத்த விளையாட்டு உலகிலும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி யுள்ளார்.