பாலஸ்தீனர்களுக்காக காத்திருக்கும் பொருட்கள்
பாலஸ்தீனர்களுக்கு கொடுப்பதற்காக 1 லட்சத்து 70 ஆயிரம் டன் மனிதாபிமான உதவிகளுடன் லாரிகள் காசா எல்லைகளில் காத்துக்கொண்டுள்ளதாக ஐ.நா மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் அதிகாரிகள் லாரிகளை கொண்டு செல்ல அனுமதி தராமல் தவிர்த்து வருகிறார்கள். இதனால் பாலஸ்தீனர்களுக்கு தேவையான உதவிகள் உடனடியாக அவர்களுக்கு செல்வதில்லை என குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்களை பாராட்டிய போப் லியோ
போர் நடக்கும் பகுதிகளில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து உண்மைகளைப் பதிவு செய்யும் பத்திரிகை யாளர்களுக்கு போப் லியோ பாராட்டு தெரி வித்துள்ளார். இன்று காசா, உக்ரைன் என குண்டுகள் வீசப்படும் பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்கி றோம். உயிர் பறிக்கப்படும் அபாயம் இருந்தும் உண்மைச் செய்திகளை நமக்கு கொ டுப்பதற்காகப் பத்திரிகையாளர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.
சீனா மீது 100 சதவீத கூடுதல் வரி விதித்த டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சீனா மீது கூடுதலாக 100 சதவீத வரி விதித்துள்ளார். இந்த வரி விதிப்பு நவம்பர் 1 அல்லது அதற்கு முன் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. அரிய கனிமங்கள் ஏற்றுமதியின் மீது சீன அரசு மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டு வந்துள்ள நிலையில், ஏற்கெனவே விதித்துள்ள 30 சதவீத வரியுடன் இந்த வரியையும் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் சீனாவுக்கான சிப் ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
நோபல் பரிசின் மதிப்பு குறைந்து விட்டது : புடின்
நோபல் பரிசின் மதிப்பு குறைந்து விட்டது என அமைதிக்கான ரஷ்ய ஜனாதிபதி விமர்சித்துள்ளார். நோபல் பரிசுக் குழு அமைதிக்காக எதுவுமே செய்யாதவர்களுக்கு இந்த பரிசை வழங்கிய பல நிகழ்வுகள் நடந்துள்ளன. தற்போதும் அப்படித்தான் இந்த பரிசு கொடுக்கப்பட்டு இந்தப் பரிசின் மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது என கூறினார். மேலும் டிரம்ப் இந்த பரிசுக்கு தகுதியானவரா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
காவல்துறை பயிற்சி மையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள காவல்துறை பயிற்சி மையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஏழு காவலர்களும் ஆறு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சமீப நாட்களாக பயங்கரவாதத் தாக்குதல் தீவிரம டைந்து வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானு டன் அதன் மோதல் போக்கு அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.