games

img

விளையாட்டு...

இளையோர் மகளிர் டி-20 உலகக்கோப்பை 2025 மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லுமா இந்தியா?

19 வயதுக்குட்பட்ட மகளிர் இளையோர் டி-20 உலகக்கோப்பை தொடரின் 2ஆவது சீசன் மலேசியா நாட்டில் நடைபெற்று வருகிறது.  இந்தியா, இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.  வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியும், இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியும் வீழ்த்தி, இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிக்கு முன்னேறின. இந்நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப்போட்டி விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறுகிறது. இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், முதன்முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா அணியும் என இரு அணிகளும் கோப்பையின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்ற முதல் இளையோர் மகளிர் டி-20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது. இந்திய அணியிடம் தோல்வியை தழுவி இங்கிலாந்து அணி இரண்டாம் இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இடம்: பயுமாஸ் ஓவல், பந்தமரான்
நேரம்: மதியம் 2:30 மணி 
(இந்திய நேரம்)
சேனல்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், 
ஹாட் ஸ்டார் (ஓடிடி)

ஆள்மாறாட்டம் போன்ற சர்ச்சை
இந்திய கிரிக்கெட் அணியின் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

இந்திய அணிக்கு எதிரான 4ஆவது டி-20 போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வெள்ளிக்கிழமை அன்று நிறைவு பெற்றது. இந்த ஆட்டத்தில் இங்கி லாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் அரை சதம் அடித்திருந்த சிவம் துபே, இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய வந்த  போது தலையில் ஏற்பட்ட காயம் காரண மாக விலகினார். அவருக்கு பதிலாக  ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப் பட்டார். விதிப்படி போட்டியில் இருந்து வெளியேறும் வீரருக்கு இணையான மாற்று வீரரை தான் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் பேட்டிங்கில் அதிக திறனும், பந்துவீச்சில் குறைந்த திறனும் உடைய சிவம் துபேவுக்கு மாற்றாக பந்து வீச்சில் அதிக திறன் உடைய ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ்  பட்லர் நடுவர்களிடம் விளக்கம் கேட்டார். நடுவர்கள் விதிகளை கூற அமைதியாக சென்றுவிட்டார். போட்டி முடிந்த பின்னர் இங்கி லாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கூறுகை யில்,”காயம் ஏற்பட்ட சிவம் துபேவுக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா அணிக்குள் கொண்டு வரப்பட்டது நியாயமான மாற்று  கிடையாது. துபேவும் மணிக்கு 25 மைல் வேகத்தில் பந்து வீசியதில்லை. ராணாவும் பேட்டிங்கில் பெரியதாக முன்னேறி விடவில்லை. நாங்கள் பேட்டிங் கள மிறங்கும்போது இந்திய அணியில் ஹர்ஷித் உள்ளதை பார்த்து கேட்டதற்கு, துபேவுக்கு மாற்றாக வந்துள்ளார் எனச் சொன்னார்கள். அப்போதே அதை ஏற்க  மறுத்தேன் என அவர் கண்டனம் தெரி வித்தார்.