சவுதாம்டன்
டெஸ்ட் தொடரின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில் ஐசிசி நடத்தும் டெஸ்ட் தொடர்களை ஒருங்கிணைத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற பெயரில் புதிய தொடர் நடத்தப்பட்டது. இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின.
இறுதி ஆட்டம் இங்கிலாந்து நாட்டின் முக்கிய நகரான சவுதாம்டனில் வரும் 18-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.
வீரர்கள் விபரம் :
கனே வில்லயம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோலஸ், காலின் டி கிராந்தோம்மி, வில் யங், டாம் லதாம் (வி.கீ), டாம் பிளண்டல், டெவோன் கான்வே, வால்டிங், டிரெண்ட் பவுல்ட், மேட் ஹென்றி, கெயில் ஜெமிசன், அஜாஸ் படேல், டிம் சௌத்தீ, நெய்ல் வாக்னர்.