games

img

முதல் ஒருநாள் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து  

நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.  

நெதர்லாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையேயான டி20 போட்டி மழைக்காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி மவுண்ட் மங்குனியில் இன்று நடைபெற்றது.  

இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மைக்கேல் ரிப்போன் 67 ரன்களை அடித்தார். நியூசிலாந்து அணி தரப்பில் பிளைர் டிக்னர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது.  

இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, ஹென்றி நிக்கோலஸ் – வில் யங் இணை சிறப்பாக விளையாடினர். இந்த ஆட்டத்தில் ஹென்றி நிக்கோலஸ் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய வில் யங் சிறப்பாக விளையாடி சதமடித்து நியூசிலாந்து அணிக்கு வெற்றியை நிர்ணயித்தார்.  

இதன்மூலம் 38.3 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.