games

img

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: 155 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி  

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 155 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை தோற்கடித்து வெற்றி பெற்றது.  

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் உள்ள ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடின.  

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி சார்பாக களமிறங்கிய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 119 பந்துகளில் 123 ரன்கள் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் 107 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து அதிரடியாக சதமடித்தனர். இவர்கள் இருவரின் அபார பேட்டிங்கால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்தது.  

பின்னர் 318 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 40.3 ஓவரில் 162 ரன்களுக்கு எடுத்து ஆல்அவுட் ஆனது. இதையடுத்து 155 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.  

இந்திய அணியின் ஸ்நேஹ் ராணா 3 விக்கெட்டுகளையும், மேக்னா சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கோஸ்வாமி, ராஜேஸ்வரி கெய்க்வாட் மற்றும் பூஜா வஸ்திராகர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.  

இந்திய மகளிர் அணி:

யாஸ்திகா பாட்டியா, ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, மிதாலி ராஜ், ஹர்மன்ப்த் கவுர், ரிச்சா கோஷ், ஸ்னே ராணா, பூஜா வஸ்த்ரகர், ஜூலன் கோஸ்வாமி, மேக்னா சிங், ராஜேஸ்வரி கயக்வாட்.