இளையோர் மகளிர் டி-20 உலகக்கோப்பை 2025 - இந்தியா சாம்பியன்
19 வயதுக்குட்பட்ட மகளிர் இளையோர் டி-20 உல கக்கோப்பை தொடரின் 2ஆவது சீசன் மலேசியா நாட்டில் நடைபெற்றது. இந்தியா, இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கி லாந்து என மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கி லாந்து ஆகிய 4 அணிகள் அரை யிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்களின் முடி வில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி யும், இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியும் வீழ்த்தி, இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிக்கு முன்னேறின. இந்நிலையில், ஞாயிறன்று நடை பெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் கள மிறங்கியது. இந்திய வீராங்கனைகளின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியா மல் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 82 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிக பட்சமாக கோங்காடி திரிஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 120 பந்துகளுக்கு 83 ரன்கள் எடுத் தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கு டன் களமிறங்கிய இந்திய அணி 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை (84 ரன்கள்) எளிதாக எட்டி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய மகளிர் அணிக்கு இது இரண்டாவது இளையோர் டி-20 உலகக்கோப்பை ஆகும். ஆட்ட மற்றும் தொடர் நாயகியாக இந்திய வீராங்கனை கோங்காடி திரிஷா தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து இரண்டாவது முறை யாக இளையோர் மகளிர் டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி பாராட்டு மழையில் நனைத்து வருகிறது.
இந்திய அணி உயரத்தில் இருக்கிறது
கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் நிகி பிரசாத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “நாங்கள் அனைவரும் அமைதியாகவும், நிதானமாகவும் செயல்பட முயற்சி செய்தோம். எங்களது வேலையை சரியாக செய்தோம். ஆடுகளத்தில் களமிறங்கி எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டியுள்ளோம். எங்களுக்கு அனைத்து சிறந்த வசதிகளையும் செய்து கொடுத்த பிசிசிஐக்கு மிக்க நன்றி. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று உயரத்தில் இருக்கிறது. இது மிகவும் சிறப்பான தருணம்” என அவர் கூறினார்.