இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையே மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
இந்தியாவிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட தொடரின் முதலிரண்டு ஆட்டங்களின் முடிவில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து தொடரைக் கைப்பற்றிய நிலையில், கடைசி டி-20 ஆட்டம் கொல்கத்தா. ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.
இந்நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்றைய போட்டியிலும் வென்று நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்யுமா அல்லது ஆறுதல் வெற்றியை நியூசிலாந்து பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இரு அணிகள் இடையே முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் வருகிற 25ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.