games

img

விளையாட்டு...

கால்பந்து விருதுகள் - ஆசியாவின்  சிறந்த வீரராக தென் கொரியாவின் சோன் ஹியுங் சிறந்த வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின் எல்லி கார்பென்டர்

தென் கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் செவ்வாயன்று ஆசிய கால்பந்துக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.  ஆடவர் பிரிவில் சிறந்த ஆசிய வீரராக தென் கொரியா தேசிய கால்பந்து அணியின் முன்கள வீரரும், டோட்டன்ஹாம் (இங்கிலாந்து கிளப்) அணியின் நட்சத்திர வீரருமான சோன் ஹியுங் மின் தேர்வு செய்யப்பட்டார். சோன் ஹியுங்கிற்கு இது நான்காவது ஆசிய விருதாகும். ஏற்கெனவே 2015, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் சோன் ஹியுங் சிறந்த ஆசிய வீரருக்கான விருதை வென்றுள்ளார். அதே போல ஆஸ்திரேலிய நாட்டின் எல்லி கார்பென்டர் சிறந்த ஆசிய கால்பந்து வீராங்கனைக்கான விருதை வென்றார். எல்லி கார்பென்டர் பிரெஞ்சு கிளப்  அணியான லியோனுக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி ஊழல் எதிர்ப்பு பிரிவு தலைவராக இலங்கையின் சுமதி தர்மவர்தன தேர்வு

சர்வதேச கிரிக்கெட் வாரி யத்தின் (ஐசிசி) ஊழல் எதிர்ப்பு  பிரிவு (ஏசியு) தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றிய சர் ரோனி பிளனகன் (வடக்கு அயர்லாந்து காவல்துறை உய ரதிகாரி) சமீபத்தில் ஓய்வு பெற்றார்.  இந்நிலையில், ஏசியு பிரிவின் புதிய தலைவராக இலங்கை நாட்டின் சுமதி தர்மவர்தனவை நியமிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.  இலங்கையின் முன்னாள் சொலி சிட்டர் ஜெனரலான சுமதி தர்மவர்தன பல சட்ட சிக்கல்களில் அரசாங்க த்தையும், அந்நாட்டின் விளையாட்டு அமைச்சகத்தையும் காப்பாற்றியுள்  ளார். விளையாட்டு பிரச்சனைக்குத் தீர்வு மற்றும் சட்ட நுணுக்கங்களில் திறமை வாய்ந்தவரான சுமதி தர்மவர்தன இன்டர்போல், போதைப்பொருள் குற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம், விளையாட்டு ஊழல் விவ காரங்களை விசாரணை செய்தல் மற்றும் விளையாட்டு சட்டம் தொடர் பான குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்குகளை மேற்பார்வையிடுதல் ஆகியவற்றுடன் திறம்பட பணிபுரிந்துள்ளார். நவம்பர் 1 அன்று முறைப்படி சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஊழல்  எதிர்ப்பு பிரிவு (ஏசியு) தலைவராக சுமதி தர்மவர்தன பொறுப்பேற்பார் என ஐசிசி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

புரோ கபடி 2024

இன்றைய ஆட்டங்கள்

இரண்டு ஆட்டங்களும் 
கச்சிபலி மைதானம், ஹைதராபாத்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)

புனே - தில்லி
நேரம் : இரவு 8 மணி

மும்பை - ஜெய்ப்பூர்
நேரம் : இரவு 9 மணி

 

வினிசியஸ் ஜூனியருக்கு பாலன் டி’ஓர் விருது வழங்க மறுப்பு விருது வழங்கும் நிகழ்வை புறக்கணித்த ரியல் மாட்ரிட்

சர்வதேச கால்பந்து உலகில் மிக வும் உயரிய விருதான பாலன் டி’ஓர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதன்படி 68ஆவது பாலன் டி’ஓர் விருது வழங்கும் விழா பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள “தியேட்டர் டு சாட்லெட் அரங்கில்” திங்க ளன்று நடைபெற்றது. ஆடவர் பிரிவிற் கான பாலன் டி’ஓர் விருது பிரிவில் ஸ்பெயின்  வீரர் ரோட்ரி (மான்செஸ்டர் சிட்டி கிளப் - இங்கிலாந்து), பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் (ரியல் மாட்ரிட் கிளப் - ஸ்பெயின்), இங்கி லாந்து அணி வீரர் ஜூட் பெல்லிங்காம் (ரியல் மாட்ரிட் கிளப் - ஸ்பெயின்) ஆகி யோருக்கு இடையே கடும் போட்டி நில வியது. இறுதியில் ஸ்பெயின் வீரர் ரோட்ரி பாலன் டி’ஓர் விருதிற்கு தேர்வு  செய்யப்படுவதாக பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு அறிவித்தது. ரசிகர்கள் அதிர்ச்சி மெஸ்ஸி (அர்ஜென்டினா), ரொனால் டோ (போர்ச்சுக்கல்), நெய்மார் (பிரேசில்) ஆகிய முன்னணி நட்சத்தி ரங்களுக்கு இணையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வினிசியஸ் ஜூனி யருக்கு (பிரேசில்) நடப்பாண்டுக்கான பாலன் டி’ஓர் விருது கண்டிப்பாக கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் ஸ்பெயின் அணி வீரர் ரோட்ரிக்கு அறி விக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பாரபட்சமான முடிவு என சமூக வலைத்தளங்களில் கால்பந்து ரசிகர்கள் கண்டனம் தெரி வித்து மீம்ஸ்களை வெளியிட்டு வரு கின்றனர்.  ரியல் மாட்ரிட் புறக்கணிப்பு அதே போல ஸ்பெயின் கிளப் அணி யான ரியல் மாட்ரிட், தனது அணியின் நட்சத்திர வீரரான வினிசியஸ் ஜூனி யருக்கு பாலன் டி’ஓர் விருது வழங்க மறுத்ததற்கு கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. மேலும் பாலன் டி’ஓர் விருதுக்கு ஸ்பெயின் அணி வீரர் ரோட்ரி  ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டதை அறிந்து கொண்டு விருது வழங்கும் நிகழ்வையும் ரியல் மாட்ரிட் அணி புறக் கணித்தது. தங்கள் நாட்டு அணிக்கு பாலன் டி’ஓர் விருது கிடைத்தாலும், தனது கிளப் அணி வீரருக்கு விருது மறுக்கப்பட்டதற்கு ரியல் மாட்ரிட் அணி விருது வழங்கும் நிகழ்வை புறக் கணித்ததன் மூலம் அந்த அணி பாராட்டு மழையில் நனைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  ஐடானா பான்மடிக்கு டபுள் மகளிர் பிரிவில் ஸ்பெயின் வீராங் கனை ஐடானா பான்மடி இரண்டாவது முறையாக பாலன் டி’ஓர் விருதை வென்றார். கடந்த ஆண்டும் ஐடானா பான்மடி பாலன் டி’ஓர் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசுத் தொகை கிடையாது

பாலன் டி’ஓர் விருது பெற்ற வருக்கு என்று தனிப்பட்ட முறையில் பரிசுத் தொகை கிடையாது. மாறாக அணி ஒப்பந்தம் ஸ்பான்சர் உள்ளிட்ட மற்ற விவகாரங்களில் அவருக்கு தனி யாக போனஸ் என்பது வழங்கப்படு கிறது. மேலும் விளையாட்டு சார்ந்த விருது விழாவில் வாழ்நாள் முழுவதும் கலந்து கொள்ள ஏதுவாக பாஸ் வழங்கப்படுகிறது.