games

img

சர்வதேச போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் குவித்து மிதாலி ராஜ் சாதனை

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிர ரன்களை எடுத்து, சாதனை புரிந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்.

லக்னோவில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் மிதாலி ராஜ் 36 ரன்கள் எடுத்தார். அப்போது இந்த வரலாற்று சாதனை படைத்துள்ளர்.
ஒருநாள் , டெஸ்ட், டி20 ஆகிய 3 பிரிவுகளிலும் சேர்த்து 10 ஆயிரம் ரன்களை எட்டி உலக அளவில் 2-வது இடத்தை மிதாலி ராஜ் பெற்றுள்ளார். முன்னதாக இங்கிலாந்து அணியின் சார்லோட்டி எட்வார்ட்ஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இதுவரை 212 ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் மிதாலி ராஜ், 6,974 ரன்கள் குவித்துள்ளார். 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 663 ரன்களும் 89 டி20 போட்டிகளில் விளையாடி 2,364 ரன்களும் மிதாலி ராஜ் எடுத்துள்ளார்.

மிதாலி ராஜ் அடைந்த சாதனை குறித்து பிசிசிஐ ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளது. பிசிசிஐ ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்து செய்தியில்,
“ என்ன அருமையான சாம்பியன் கிரிக்கெட் வீராங்கனை. சர்வதேச கிரிக்கெட்டில் 3 பிரிவுகளிலும் 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீராங்கனை மிதாலிராஜ்” எனத் தெரிவித்துள்ளது.