games

img

விளையாட்டு...

1 சென்டிமீட்டரில் பறிபோன கோப்பை டைமண்ட் லீக்கில் இரண்டாம் இடம் பிடித்த நீரஜ் சோப்ரா

பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகரில் நடைபெற்று வரும் டை மண்ட் லீக் தடகள தொடரின் ஆட வர் ஈட்டி எறிதல் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா,  பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கிரனடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் உட்பட 7 பேர்  களமிறங்கினர்.  தொடக்கம் முதலே பர பரப்பாக நடைபெற்ற இந்த இறுதிச் சுற்றில் வெறும் ஒரு சென்டிமீட்டர் வித்தியாசத்தில் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க நாயகன் நீரஜ் சோப்ரா இரண்டாம் பிடித்தார். முதல் இரண்டு வாய்ப்புகளில்  86.82, 83.49 மீ., துாரம் எறிந்த நீரஜ்  சோப்ரா,  மூன்றாவது வாய்ப்பில் அதிகபட்சமாக 87.86 மீ., துாரம் எறிந் தார். கடைசி மூன்று வாய்ப்பிலும் நீரஜ் சோப்ரா (82.04, 83.30, 86.46) ஏமாற்றம் அளிக்க,  கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 87.87 மீ.,  துாரம் எறிந்து டைமண்ட் லீக்  கோப்பையை வென்றார். ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் 85.97 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து மூன்றாவது இடத்தை பிடித்தார்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இன்று அரையிறுதி ஆட்டங்கள்

ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவின் ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா, சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா, சீனா ஆகிய 4 நாடுகள் அரையிறுதிக்கு முன்னேறின.  இந்நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் திங்களன்று நடைபெறுகிறது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - சீனாவும், இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- தென் கொரியா அணிகளும் மோதுகின்றன. அரையிறுதி  ஆட்டங்களில் வெல்லும் அணிகள் செவ்வாயன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஒலிம்பிக் பதக்க மகன் மாரியப்பனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற 17ஆவது பாரா ஒலிம்பிக் தொடரின் ஆடவர் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கலப்பதக்கம் வென்றார். இந்நிலையில், தாயகம் திரும்பிய மாரியப்பன், சென்னை  முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். தொடர்ந்து பாரா ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதை பாராட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்வில் விளை யாட்டுத் துறை செயலர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.