ஐபிஎல் 2022க்கான அதிகாரப்பூர்வ ஜெர்ஸியை மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் சனிக்கிழமை வெளியிட்டது.
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதிவரை முடிவடைய உள்ளது. இந்த வருடம் இந்தியாவிலேயே நடைபெறும் இந்த தொடர் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டுமே நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் இளம் வீரர்களை கொண்ட அணியாக திகழும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய இரு அணிகளும் தங்களது புதிய ஜெர்ஸியை வெளியிட்டுள்ளது.
இதில் மும்பை இந்தியன்ஸ் வெளியிட்டுள்ள புதிய ஜெர்ஸியில் தங்கம் கலந்த ஊதா நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் அந்த அணிகள் ஸ்பான்சராக இந்த முறை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரபல கூல்டிரிங்ஸ் நிறுவனமான “ஸ்லைஸ்” பெயர் இடம் பெற்றுள்ளது.
அதனைதொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் வெளியிட்டுள்ள புதிய ஜெர்ஸியில் ஒருபுறம் ஊதா நிறமும் மறுபுறம் சிவப்பு நிறமும் இருக்க நடுவில் 2 நிறங்களும் கலந்தவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.