ஐபிஎல் சீசனில் புதிதாக விளையாடவுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியின் லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2021 முதல் தொடங்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி வருகிற ஐபிஎல் தொடர் முதல் விளையாடப் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் உரிமத்தை சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் குழுமம் வாங்கியுள்ளனர். ஐபிஎல் 2022-ல் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடவுள்ள இந்த அணியில் ரஷித் கான், ஷுப்மன் கில், முகமது ஷமி, ஜேசன் ராய், பெர்க்யூசன், மேத்யூ வேட், அபினவ் சதராங்கனி, ராகுல் தெவாட்டியா, நூர் அகமது, ஆர்.சாய் கிஷோர், டொமினிக் டிரேக்ஸ், ஜெயந்த் யாதவ், விஜய் சங்கர், தர்ஷன் நல்கண்டே, யாஷ் தயால், அல்சாரி ஜோசப், பிரதீப் சங்வான், டேவிட் மில்லர், விருத்திமான் சாஹா, குர்கீரத் சிங், வருண் ஆரோன், சாய் சுதர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் .
இந்நிலையில், தற்போது இந்த அணியின் லோகோ வெளியிடப்பட்டுள்ளது. வெர்ச்சுவல் நிகழ்வாக மெட்டாவெர்ஸ் மூலம் நடைபெற்ற நிகழ்வில் லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, இளம் வீரர் ஷூப்மன் கில் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த லோகோ திரிகோண வடிவில் பட்டத்தை இன்ஸ்பிரேஷனாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது அந்த மாநிலத்தில் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.