2036 ஒலிம்பிக் தொடரை நடத்த இந்தியா விருப்பம்
உலகின் முதன்மையான விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் போட்டியின் 2036ஆம் ஆண்டுக் கான சீசனை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது. இந்தியா போல இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடு கள் விண்ணப்பித்துள்ள நிலையில், கடைசி நாடாக இந்தியா விண்ணப்பித் துள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுப்பி யுள்ள விண்ணப்பத்தில், இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கு தகுதியான நகரங்கள், அவற்றில் இருக்கும் வசதி கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதே போல ஒலிம்பிக் போட்டி நடத்த அனுமதி அளித் தால், இந்திய அரசு என்னென்ன உத விகள் செய்யும் என்ற விபரங்களும் அந்த விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தாலும் இறுதியில் எந்த நாட்டில் ஒலிம்பிக் தொடர் நடை பெறும் என்பதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியே முடிவு செய்யும். 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்றது. 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலி யாவின் பிரிஸ்பேன் நகரில் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிப் ஆண் மருத்துவ அறிக்கையில் உறுதி
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் ஒலிம்பிக்கின் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி மற்றும் அல்ஜீரியாவின் இமானே கெலிப் விளையாடிய ஆட்டத்தில், 46 நொடி களில் ஏஞ்சலா வாக் அவுட் (விளை யாட முடியவில்லை) கொடுத்தார். “இமானே கெலிப் பெண் அல்ல ஆண்” என நடுவர்களிடம் ஏஞ்சலா தெரிவித்தார். இந்த விவகாரம் சர்ச்சையானது. இருப்பினும் தான் பெண்ணாகப் பிறந்து, பெண்ணா கவே வாழ்கிறேன் என இமானே கெலிப் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த சர்வதேச குத்துச்சண்டை சங்கம் இமானே கெலிப்பை சோத னை அடிப்படையில் தகுதி நீக்கம் செய்தது. எனினும் பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டி சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் பரிந்துரைகளை ஏற்காத காரணத்தால் இமானே கெலிப் 66 கிலோ பிரிவில் தங்கமும் வென்றார். இந்நிலையில், இமானே கெலிப்பின் பாலின பரிசோதனை முடி வுகளை பிரான்ஸ் நாட்டு பத்திரி கையாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அதில்,”மருத்துவர்கள் சவுமையா பெடலா மற்றும் ஜாக்யூஸ் யங் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை யில் இமானே கெலிபுக்கு “5-ஆல்பா ரிடக்டேஸ் குறைபாடு” (ஆண்களி டையே காணப்படும் பாலியல் வளர்ச்சிக் கோளாறு) உள்ளது. மேலும் அவரது உடலுக்குள் டெஸ்ட்டிக்கல்ஸ் உள்ளது. மேலும், எக்ஸ் ஒய் (XY) குரோமோசோம்கள் இருப்பதும் உறுதியாகி உள்ளது” என கூறியுள்ளார்.
இரண்டு ஆட்டங்களும் : கச்சிபலி, ஹைதராபாத்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் ஒடிடி
பாட்னா - மும்பை
நேரம் : இரவு 8 மணி
தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ்
நேரம் : இரவு 9 மணி