மகளிர் இளையோர் டி-20 உலகக்கோப்பை 2025 இறுதியில் இந்தியா
19 வயதுக்குட்பட்ட மகளிர் இளையோர் டி-20 உலகக்கோப்பை மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியும், இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியும் வீழ்த்தி, இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிக்கு முன்னேறின. இறுதிப்போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி (ஞாயிறன்று) நடை பெறுகிறது. மகளிர் இளையோர் டி-20 உலகக்கோப்பையின் முதல் சீசனை இந்திய அணி வென்றது என்பது குறிப்பிடத் தக்கது.
ஐபிஎல் 2025 - சென்னை அணியின் ஜெர்சி அறிமுகம்
உலகின் மிகப்பெரிய உள் ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் 2025 மார்ச் 21ஆம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2024 நவம்பர் 24, 25ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் 577 வீரர்கள் பங்கேற்றனர். 62 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். இந்நிலையில், ஐபிஎல் பிரிவில் அதிக ரசிகர்களை கொண்ட அணி யும், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய ஜெர்சியு டன் களமிறங்க உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான நிறுவன மான எடிஹட் (Etihad Airways) ஸ்பான்சரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஜெர்சியை சென்னை அணி நிர்வாகம் தனது அதிகாரப் பூர்வ டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளது.
பாகிஸ்தானில் கேப்டன்கள் போட்டோஷூட் திடீர் ரத்து இந்தியாவிற்கு ஆதரவாக பாகிஸ்தானை புறக்கணிக்கிறாரா ஜெய் ஷா?
பொதுவாக ஒரு உலகக் கோப்பை தொடர் தொடங்கும் முன் பங்கேற்கும் நாடு களின் கேப்டன்கள் அடங்கிய போட்டோ ஷூட் நடத்தப்படும். அதாவது கேப்டன் கள் அனைவரும் ஒன்றாக கூடி உலகக்கோப்பைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். இது கிரிக்கெட் உலகின் மரபு ஆகும். இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் 9ஆவது சீசன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் மரபுப்படி நடத்தப்படும் கேப்டன்கள் போட்டோஷூட்டை ரத்து செய்ய ஐசிசி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்புப் பிரச்சனை காரணமாக போட்டோ ஷூட்டில் பங்கேற்க இந்திய கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தான் செல்லமாட் டார் என தகவல்கள் வெளியான நிலை யில், அந்நிகழ்வையே ரத்து செய்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) அறிவித்துள்ளதாக கூறப்படு கிறது. சர்வதேச கிரிக்கெட் வாரிய தலைவராக ஜெய் ஷா (அமித் ஷா மகன்) இருப்பதன் காரணமாகவே பாகிஸ்தானில் கேப்டன்கள் போட்டோ ஷூட் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.