games

img

விளையாட்டு

இந்தியாவுக்கு வந்து விளையாடாவிட்டால் புள்ளிகளை இழக்க நேரிடும் வங்கதேசத்துக்கு ஐசிசி எச்சரிக்கை?

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு என்ற பெயரில் அந்நாட்டு வேகப்பந்து வீச்சாளர் முஷ்தாபிஷூர் ரஹ்மான் (கொல்கத்தா அணிக்காக)  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்  அறிவுறுத்த லின் பேரில் ஐபிஎல்  தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிகழ்வு பாஜகவினர் கோரிக்கைக்கு பின்பு அரங்கேறியது. இந்த விவகாரம் தொடர்பாகவும், டி-20 உலகக்கோப்பை பங்கேற்பு (இந்தியாவில் நடைபெறும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை) தொடர்பாகவும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கும், சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கும் (ஐசிசி)  இடையே நடைபெறவிருந்த ஆன்லைன் கூட்டம்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில், டி-20 உலகக்கோப்பையில் வங்கதேசத்தின் கோரிக்கையை ஏற்று போட்டிகளை மாற்றுவது கடினம் என்றும், இந்தியாவுக்கு வந்து விளையாடவில்லை என்றால் புள்ளிகளை இழக்க  நேரிடும் என்றும் ஐசிசி தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  ஐசிசி தலைவராக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் லீக் தொடரில் இத்தகைய

சூழலில், ஐபிஎல் தொடரில்  நீக்கப்பட்ட முஷ்தாபிஷூர் ரஹ்மான்   பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் (ஐபிஎல் போன்று உள்ளூர் தொடர்) விளையாடப் பதிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஐசிசி ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளது

: பிசிபி  முஷ்தாபிஷூர் விவகாரம் காரணமாக இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், ஐசிசி தங்களுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளது என வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கூறியுள்ளது. இதுதொடர்பாக  பிசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் “டி-20 உலகக்கோப்பையில் இந்தியாவிற்குச் செல்லும் வங்கதேச தேசிய கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு குறித்து நாங்கள் தெரிவித்த கவலைகள் மற்றும் போட்டிகளை இடமாற்றம் செய்யக் கோரிய கோரிக்கை தொடர்பாக ஐசிசி-யிடமிருந்து பதில் கிடைத்துள்ளது.   பாதுகாப்பு மற்றும் வீரர்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் வங்கதேச வாரியத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐசிசி உறுதியளித்தது” என அதில் கூறப்பட்டுள்ளது.  இந்தியாவுக்கு வந்து விளையாடாவிட்டால் புள்ளிகளை இழக்க நேரிடும் என வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு  ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளி யான செய்திகளுக்கு மத்தியில், பிசிபி வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

முஷ்தாபிஷூர் ரஹ்மானுக்கு இழப்பீடு கிடையாது

ஐபிஎல் ஏலத்தில் சென்னை, தில்லி  அணிகளுடன் கடும் போட்டி போட்டு, 9.20 கோடி ரூபாய்க்கு முஷ்தாபிஷூரை கொல்கத்தா அணி வாங்கியிருந்தது. தற்போது அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிட்ட நிலையில், விதிகளின்படி அவருக்கு இழப்பீடு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் மூலம் வெளியான தகவலின்படி, ஒரு வீரர் காயம் காரணமாகவோ அல்லது விளையாடும்போது ஏற்படும் உடல்நலக் குறைவு காரணமாகவோ விலகினால் மட்டுமே காப்பீடு மூலம் சம்பளம் அல்லது இழப்பீடு கிடைக்கும். ஆனால், முஷ்தாபிஷூர் விவகாரத்தில், அவர் தானாக விலகவோ அல்லது காயம் காரணமாக நீக்கப்படவோ இல்லை. பிசிசிஐயின் நிர்வாக ரீதியான முடிவினால் அவர் நீக்கப்பட்டுள்ளதால், தற்போதைய காப்பீட்டு விதிகளின் கீழ் அவருக்குப் பணம் வழங்க கொல்கத்தா  அணிக்கு எந்தவித சட்டப்பூர்வ அனுமதி  இல்லை என அதில் கூறப்பட்டுள்ளது.