games

img

விளையாட்டு

ஆஷஸ் - சிட்னி டெஸ்ட்ஹெட், ஸ்மித் சதம் ; வலுவான நிலையில் ஆஸி.,

ஆஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதா னத்தில் ஞாயிறன்று ஆஷஸ் தொடரின் ஐந்தா வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டிதொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. ஜோ ரூட்டின் (160 ரன்கள்) அபார சதத்தின் உதவியால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 97.3 ஓவர்களில் 384 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக மைக்கேல் நேசர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  பின்னர் தனது முதல் இன்னிக்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 34.1  ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து இருந்தது. டிராவிஸ் ஹெட் (91 ரன்கள்), நேசர் (1 ரன்) களத்தில் உள்ளனர். செவ்வாய்க்கிழமை அன்று தொடர்ந்து 3ஆவது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஹெட் (12ஆவது) சதமடித்தார். அவர் 166 பந்து களில் 163 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதே போல கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 37ஆவது டெஸ்ட் சதத்தை விளாசி னார். லபுஸ்சாக்னே (48 ரன்கள்), கிரீன் (37 ரன்கள்) ஓரளவு கைகொடுக்க, மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்தி ரேலிய அணி 124 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்தது.  ஸ்மித் (129 ரன்கள்), வெப்ஸ்டர் (42 ரன்கள்) ஆகியோர் களத்தில் உள்ளனர். இங்கிலாந்தை விட ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில், புதனன்று 4ஆவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

ஊக்க மருந்து சோதனை தமிழ்நாடு தடகள வீராங்கனை  தனலட்சுமி சேகருக்கு 8 ஆண்டுகள் தடை

2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான பட்டியல் விவரத்தை தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (நாடா) வெளியிட்டது. அதில் 120 பேர்  புதிதாக இணைந்துள்ளனர். ஏற் கெனவே அந்தப் பட்டியலில் 227 பேர்  இருந்த நிலையில், தற்போது பட்டிய லில் பதிவுபெற்றோர்களின் எண்ணிக் கை 347ஆக அதிகரித்துள்ளது. 3 பேர் நீக்கம் இதுதொடர்பான அறிக்கையின் மூலம் வெளியான தகவலில், 2025  டிசம்பர் வரை நடைபெற்ற ஊக்க மருந்து சோதனையில் 7,068 வீரர் - வீரா ங்கனைகளின் தரவுகள் சேகரிக்கப் பட்டன. சோதனை முடிவில் 120 வீரர் - வீராங்கனைகள் (1.5% பாதிப்பு விகிதம்) ஊக்க மருந்து சோதனை யில் (பதிவும் சேர்த்து) சிக்கியுள்ள னர். இது கடந்த ஆண்டை விட சற்று குறைவு என்றாலும், எண்ணி க்கை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது. குறிப்பாக ரஜன் குமார் (கிரிக்கெட் - உத்தரகண்ட் வேகப்பந்து வீச்சாளர்), தனலட்சுமி சேகர் (தட களம் - தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை), ரத்தன் பாலா தேவி (கால்பந்து - இந்திய தேசிய வீராங்கனை) உள்ளிட்ட 3 பேர் தடை உத்தரவை பெற்றுள்ளனர். இரண்டாவது முறையாக ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய தமிழ்நாட்டின் தனலட்சுமி சேகருக்கு 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்  ளது. அதே போல அளவுக்கு அதிகமாக ஸ்டீராய்டு பயன்படுத்திய தற்காக ரஜன் குமார் இடைக்காலத் தடையை பெற்றுள்ளார். ரத்தன்பாலா வுக்கு 4 ஆண்டுகள் தடைவிதிக்கப் பட்டுள்ளது. புதிய இணைவு கிரிக்கெட் வீராங்கனைகள் ஸ்மிருதி, ஜெமிமா, தடகளத்தின் அவினாஷ் சேபிள், ஜோதி யாராஜி, தேஜஸ்வின் சங்கர் ஆகியோரும் ஊக்கமருந்து சோதனையில் புதிதாக இணைந்துள்ளனர். அவர்கள் தவிர ஹாக்கியிலிருந்து மன்பிரீத் சிங், சலிமா டெடெ, மல்யுத்தத்திலிருந்து அமன் ஷெராவத், கிரிக்கெட் வீரர் களான சப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், பும்ரா, கே.எல்.ராகுல்,  வீராங்கனைகளான தீப்தி சர்மா, ஷபாலி வர்மா ஆகியோர் ஏற்கெனவே அந்தப் பட்டியலில் தொடர்கின்றனர். நடப்பாண்டில் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலை யில், இந்தியா ஊக்கமருந்து கட்டுப் பாடுகளை தீவிரமாக்கியுள்ளதால், இந்தப் பட்டியலில் இணைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.