games

img

விளையாட்டு...

டெங்கு ஊசியால் பக்க விளைவு; பொருளாதாரத்தில் பிஎச்.டி., பட்டம்; பாரா ஒலிம்பிக்கில் தங்கம்

வைரலாகும் வலி நிறைந்த ஹர்விந்தர் சிங்கின் வாழ்க்கை

ஹரியானா மாநிலம் கைதால் மாவட்டத்தில் உள்ள அஜித் நகர் கிராமத்தைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங்,  பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் 17ஆவது சீசன் பாரா ஓலிம்பிக் தொடரின் ஆடவர் வில்வித்தை தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். பாரா ஒலிம்பிக் வரலாற்றில் வில்வித்தையில் தங்கப்பதக்கத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஹர்விந்தர் சிங் பெற்ற நிலையில், ஹர்விந்தர் சிங்கின் வலி நிறைந்த வாழ்க்கை தொடர்பான விஷயங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் தனது இளம் வயதி லேயே ஏராளமான துன்பங்களைச் சந்தித்துள்ளார். ஒன்றரை வயது இருக்கும் போது ஹர்விந்தர் சிங்  டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலை யில், சிகிச்சைக்காக அவருக்கு அளிக்கப்பட்ட ஊசிகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தின. அதாவது அவரது கால்கள் செயல்பாட்டை இழந்தன. 2012இல் லண்டனில் நடை பெற்ற பாரா ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டிகளைப் பார்த்து, வில்வித்தை பயிற்சி மேற்கொண்டார். கடினமான பயிற்சிக்குப் பின்னர் 2017இல் பாரா வில்வித்தை உலக சாம்பியன்ஷிப் அறிமுகமாகி, 7ஆவது இடத்தை பிடித்தார். அடுத்த ஒரே வருடத்தில் 2018இல் ஜகார்த்தா ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் இந்திய பாரா விளையாட்டுப் பிரிவின் நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்தை பெற்றார். கொரோனா ஊரடங்கின் பொழுது ஹர்விந்தர் சிங்கின் தந்தை தனது மகனை உலகத் தரம் வாய்ந்த வில்வித்தை வீரராக மாற்ற தனது பண்ணையை வில்வித்தை பயிற்சி களமாக மாற்றி உதவினார்.  அந்த பயிற்சியின் விளைவாக டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றார். இந்தியாவிற்கு பாரா ஒலிம்பிக்கில் கிடைக்கும் முதல் பதக்கம் (வெண்கலம்) ஆகும். அதே  போல தற்போது நடைபெற்று வரும் பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்து, மீண்டும் வரலாறு படைத்துள்ளார். விளை யாட்டு சாதனைகளுடன், ஹர்விந்தர் சிங் பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் பொருளா தாரத்தில் பி.எச்டி., படிப்பையும் மேற்கொண்டு வருகிறார்.  நன்றாக பிறந்து, டெங்கு ஊசியின் பக்க விளைவால் நடக்கும் திறனை  இழந்து, உடல் மற்றும் மனதளவில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு, பாரா  ஒலிம்பிக்கில் நாட்டிற்காக பதக்கங் களை வென்றது மட்டுமல்லாமல் நேர த்தை வீணாக்காமல் பொருளாதா ரத்தில் பிஎச்.டி., பயின்று வரும் ஹர்விந்தர் சிங்கின் வாழ்க்கை தொடர் பான விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2024
அரையிறுதியில் சின்னர் ; ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் தொடரின் 144ஆவது சீசன் நியூயார்க் நகரில் ஆகஸ்ட் 26  அன்று தொடங்கிய நிலையில், தற்போது இந்த தொடரில் காலிறுதி சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து அரை யிறுதி ஆட்டங்கள் தொடங்க உள்ளன. மெத்வதேவ் அவுட் இந்திய நேரப்படி வியாழனன்று அதிகாலை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு கடைசி காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முத லிடத்தில் உள்ள இத்தாலியின் சின்னர்,  தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மெத்வதேவை எதிர்கொண்டார். சுமார் இரண்டரை மணிநேரம் நடைபெற்ற இந்த ஆட்டத் தில் சின்னர் 6-2, 1-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை யிறுதிக்கு முன்னேறினார். கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் சீசனில் இறுதி வரை போராடி கோப்பையை இழந்த (ஜோகோவிச்சிடம்) மெத்வதேவ் காலி றுதியிலேயே அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார். பெகுலா அபாரம் மகளிர் ஒற்றையர் பிரிவு கடைசி காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள போலந்தின் ஸ்வி யாடெக்கும், தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பெகுலாவும் மோதினர். தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப் படுத்திய பெகுலா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை யிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். அதி ரடிக்கு பெயர் பெற்ற ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியுடன்  அமெரிக்க ஓபன் தொடரில் இருந்து வெளியேறி னார்.