உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் தகுதி
23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூலை 19ஆம் தேதி வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் கூட்டாக நடை பெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கும் நிலையில், தற்போது கண்டம் வாரி யாக தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடை பெற்று வருகின்றன. இந்நிலையில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அன்று ஜெர்மனியின் லீப்ஜிக் நகரில் ஐரோப்பா கண்டத்திற்கான உலகக்கோப்பை தகுதிச் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஜெர்மனி 6-0 என்ற கோல் கணக்கில் சுலோவாக்கி யாவை வீழ்த்தியது. இதன்மூலம் ஜெர்மனி 19ஆவது முறையாக (ஜெர்மனி பிளவு கணக்கில் கொள்ளப் படவில்லை) உலகக்கோப்பையில் விளையாட உள்ளது. ஐரோப்பா கண்ட பிரிவுக்கான மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் லித்து வேனியாவை வீழ்த்தி 12ஆவது முறை யாக உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற நாடுகள் அர்ஜெண்டினா, ஜப்பான், நியூசி லாந்து, ஈரான், உஸ்பெகிஸ்தான், தென் கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ, துனிசியா, எகிப்து, அல்ஜீரியா, கானா மற்றும் கேப்வெர்டே, இங்கிலாந்து, கத்தார், தென்ஆப்பிரிக்கா, சவூதி அரேபியா, ஐவேரி கோஸ்ட், செனகல், பிரான்ஸ், குரோஷியா,போர்ச்சுக்கல், நார்வே, ஜெர்மனி, நெதர்லாந்து என 34 நாடுகள் தகுதி பெற்றுள்ளன. போட்டியை நடத்தும் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. இன்னும் 12 அணிகள் தகுதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடுகள விவகாரத்தில் தலையிட உரிமை இல்லை கம்பீருக்கு கவாஸ்கர் கடும் எச்சரிக்கை
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பு ஆடுகள பராமரிப்பாளரிடம்,”பிட்சை சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாக அமைக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் வெளியே கசிய, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர்,”ஆடுகளத்தின் தன்மை தொடர்பாக கம்பீர் தலையிடக்கூடாது. இதில் அவருக்கு எந்த உரிமையும் இல்லை. ஆடுகள பராமரிப்பாளரை நீங்கள் (காம்பீர்) தனியாக விட்டு விட வேண்டும். பிட்ச் நிலைமைகளை உத்தரவிட முயற்சிக்கக் கூடாது. அது சில நேரங்களில் கடுமையான எதிர் விளைவை ஏற்படுத்தும். ஆடுகளம் அமைப்பவரை அவரின் செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் விட்டு விடுவது நல்லது. ஏனென்றால் அவர் மற்றவர்களை விட தனது வேலையை பற்றி நன்கு அறிவார். பிட்ச் தயாரிப்பவரிடம் நீங்கள் அதிகமாக தலையிடக்கூடாது. இதனால் ஏற்படும் விளைவுகள் மோசமானதாக இருக்கும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
