ஈரான் தாக்குதலில் நிலை குலைந்த துபாய் விமான நிலையம் பி.வி. சிந்து, பயிற்சியாளர் இர்வான்ஸ்யா குழுவினர் சிக்கிக் கொண்டனர்
மார்ச் 3ஆம் தேதி தொட ங்கவுள்ள ‘ஆல் இங்கி லாந்து ஓபன்’ போட்டியில் பங்கேற்ப தற்காக பி.வி.சிந்து தனது இந்தோ னேசிய பயிற்சியாளர் இர்வான்ஸ்யா உடன் லண்டனுக்கு (இங்கிலாந்து தலைநகர்) துபாய் வழியாக பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், சனிக்கிழமை அன்று ஈரான் நடத்திய தாக்குதலில் சிந்து, பயிற்சியாளர் உள்ளிட்ட குழு வினர் துபாய் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டனர். இதுதொடர்பாக சிந்து தனது சமூகவலைதளப் பதிவில் (சனியன்று இரவு),”இங்கு ஒவ்வொரு மணிநேரமும் நிலைமை பயங்கர மாகிக் கொண்டே போகிறது. சில மணி நேரங்களுக்கு முன்பு நாங்கள் தங்கி யிருந்த இடத்திற்கு மிக அருகிலேயே ஒரு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. அங்கிருந்த புகை மற்றும் இடிபாடு களுக்கு மிக அருகில் எனது பயிற்சியா ளர் இருந்ததால், அவர் உடனடி யாக அங்கிருந்து தப்பியோட வேண்டி யிருந்தது. அது எங்கள் அனைவரு க்கும் மிகவும் பதற்றமான மற்றும் பய முறுத்தும் தருணமாக அமைந்தது. சாதாரண வாழ்க்கை எவ்வளவு பல வீனமானது என்பதை இத்தகைய தரு ணங்கள் உணர்த்துகின்றன. வான் வெளியில் ஏவுகணைகள் இடை மறிக்கப்படும் சத்தத்தைக் கேட்பது திகி லூட்டுகிறது” என அவர் கூறிஇருந்தார். இதனை அறிந்த இந்திய தூதரகம் சிந்து மற்றும் அவரது குழுவினரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளது. இக்கட்டான சூழலில் தங்களுக்குத் துணையாக இருக்கும் துபாயில் உள்ள இந்தியத் தூதரகத்தி ற்கு நன்றி தெரிவித்துள்ளார் பி.வி.சிந்து.
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டி 409 ரன்கள் குவித்த ஆஸி., ; 158 ரன்கள் விளாசி ஓய்வு பெற்ற அலிசா ஹீலி
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொட ரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெல்லரைவ் ஓவல் மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, கேப்டன் அலிசா ஹீலி (98 பந்துகளில் 158 ரன்கள்) மற்றும் பெத் மூனி (84 பந்துகளில் 106 ரன்கள்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள் குவித்தது. ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, தனது கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி 158 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். முன்னதாக, அலிசா ஹீலிக்கு ‘கவுரவ அணிவகுப்பு (Guard of Ilonour)’ முறையில் இந்திய வீராங்கனைகள் மரியாதை செலுத்தினர். இந்திய அணி தோல்வி 300 பந்துகளுக்கு 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 45.1 ஓவர்களில் 224 ரன் களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தி யாசத்தில் அபார வெற்றி, இந்திய அணியை ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் (ஒரு போட்டியில் கூட வெற்றி இல்லை) செய்தது. முன்னதாக, 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்த நிலையில், சுற்றுப்பயணத்தின் கடைசி நிகழ்வான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மார்ச் 6ஆம் தேதி தொடங்குகிறது.
409 அதிகப்பட்ச ஸ்கோரா?
மகளிர் ஒருநாள் போட்டி வரலாற்றில், ஞாயிறன்று ஆஸ்திரேலியா குவித்த 409 ரன்கள் அதிகப்பட்ச ஸ்கோர் (ஒரு இன்னிங்ஸ் அதிகப்பட்ச ரன்கள்) கிடையாது. இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு நியூஸிலாந்து மகளிர் அணி, அயர்லாந்துக்கு எதிராக 4 விக்கெட் இழப்பிற்கு 491 ரன்கள் குவித்ததே மகளிர் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிகப்பட்ச ஸ்கோர் ஆகும். இந்திய அணியின் அதிகப்பட்ச ஸ்கோர் 435 ஆகும். இந்திய அணியும் அயர்லாந்துக்கு எதிராக 2025ஆம் ஆண்டு இந்த சாதனையை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
