games

img

விளையாட்டு...

கான்பூர் டெஸ்ட் - 2ஆம் நாள் ஆட்டமும் ரத்து

 வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் என 2  விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க இந்தி யாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண் டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்த ரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடை பெற்று வருகிறது.  மோசமான வானி லை காரணமாக (சாரல் மழை) 2ஆவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப் பட்ட நிலையில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 35 ஓவர் கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து இருந்தது. மொமினுல் (40), ரஹீம் (6) ஆகியோர் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.  இந்நிலையில், சனியன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. இரு அணி வீரர்களும் களத்திற்குச் செல்ல  தயார்  நிலையில் இருந்தனர். ஆனால் காலை 6 மணிக்கு தொடங்கிய கனமழை விட்டு விட்டு வெளுத்து வாங்கியது. இதனால் ஒரு ஓவர் கூட வீசாமல் 2ஆம் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.  ஞாயிறன்று தொடர்ந்து 3ஆவது நாள் நடைபெறவுள்ள நிலையில், மழை வழிவிட்டால் மட்டுமே 3ஆம் நாள் ஆட்டம் நடைபெறும் என்பது குறிப்பி டத்தக்கது.

பி.டி.உஷாவின் செயலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு

பாரீஸ் ஒலிம்பிக்கில் சட்டவிரோதமாக கூடுதல் செலவு

இந்திய ஒலிம்பிக் சங்க உறுப்பினர்கள் கூட்டம் வெள்ளி யன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாரீஸ் ஒலிம்பிக்கில் சட்டவிரோதமாக கூடுதல் பணம் செல விட்டது தொடர்பாகவும், புதிய தலை மை செயல் அதிகாரி நியமனம் தொ டர்பாக விவாதிக்கவும் செயற்குழு உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட தால் இந்திய ஒலிம்பிக் சங்க உறுப்பி னர்களின் செயற்குழு கூட்டம் பாதியி லேயே முடிவடைந்தது. பி.டி.உஷா சட்டவிரோதமாக கூடுதல் செலவு? சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தொட ரில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலை வரும், பாஜக மாநிலங்களவை எம்.பி.,யுமான பி.டி.உஷா தலைமையில் வீரர் - வீராங்கனைகள் பாரீஸ் சென்ற னர். இந்த ஒலிம்பிக் தொடரில் சட்ட விரோதமாக கூடுதல் செலவு செய்யப் பட்டது தொடர்பாகவும், ஸ்பான்சர்ஷிப் வருமானம் மற்றும்  பி.டி.உஷா விதிகளை மீறி அரசு பணத்தில் சொகுசு அறையில் தங்கி யிருந்தது தொடர்பாகவும், பாரீஸ் ஒலிம்பிக் குழுவில் சட்ட விரோதமாக பலரை சேர்த்தது குறித்தும் விசா ரணை நடத்தப்பட வேண்டும் என பெரும்பாலான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.  இந்த கோரிக்கையை பி.டி.உஷா ஏற்காததால் இந்திய ஒலிம்பிக் சங்க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். இதே போல இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி யாக பி.டி.உஷாவால் பரிந்துரைக்கப் பட்ட ரகுராம் ஐயரை நியமிப்பதற்கு நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். ரகுராம் ஐயரின் நியமனத்தை ஏற்க மாட்டோம். இது சட்டவிரோத நிய மனம் ஆகும். அதனால் தலைமைச் செயல் அதிகாரி தேர்தலை முதலில் இருந்து நடத்த வேண்டும் என உறுப்பி னர்கள் கோரிக்கை விடுத்தனர். உறுப்பினர்களின் 14 கோரிக்கைக ளுக்கு ஒன்றுக்கு கூட பி.டி.உஷா பதில் அளிக்காததால் உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத னால் ஒலிம்பிக் சங்க கூட்டம் நிறுத்தப் படுவதாக அறிவித்து,  பி.டி.உஷா கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினார்.

செயற்குழு உறுப்பினர்களை கடிதம் மூலம் மிரட்டும் பி.டி.உஷா

கடந்த முறை நடைபெற்ற இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாக கூட்டத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், விவாதம் மேற்கொள்ளாமலும் கூட்டம் நிறைவடைந்த பின் செயற்குழு உறுப்பினர்களுக்கு பி.டி.உஷா  கடிதம் மூலம் மிரட்டியுள்ளார். இந்த மிரட்டல் கடிதங்களுடன் வந்த செயற்குழு உறுப்பினர்கள் இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கடிதத்தை கண்ட பின்பே பி.டி.உஷா கூட்ட அரங்கை விட்டு ஓட்டம் பிடித்ததாக செய்தி கள் வெளியாகியுள்ளன.