games

img

விளையாட்டு...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2025 - ஜுவரேவ் அபாரம்

2025ஆம் ஆண்டின் முதல் மற்றும்  113 ஆண்டுகால பழமையான ஆஸ்தி ரேலிய ஒபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில்  நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று நடை பெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றா வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனி யின் ஜுவரேவ், தரவரிசையில் இல்லாத பிரிட்டனின் ஜேக்கப்பை எதிர்கொண் டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜுவரேவ் 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அல்காரஸ் 2:55 மணிநேர போராட்டம் இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு மூன்றாவது சுற்று ஆட்டத் தில், தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயினின் அல்காரஸ், தர வரிசையில் இல்லாத போர்ச்சுக்கலின் நுனோவை எதிர்கொண்டார். அல்கா ரஸுக்கு எதிராக சரிசமமான அளவில் அதிரடியாக விளையாடியதால் இந்த ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப் பாக நடைபெற்றது. இறுதியில் 6-2, 6-4, 6-7(3-7), 6-2 என்ற செட் கணக்கில் 2:55 மணிநேர போராட்டத்துடன் அல்காரஸ் வெற்றி பெற்று 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 4ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீரர்கள் :  பவுல் (அமெரிக்கா), டேவிட் நோவிச் (ஸ்பெயின்)

காயம் காரணமாக ஒசாகா விலகல்

2 முறை (2019, 2021) ஆஸ்திரேலிய சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பானின் ஒசாகா, தனது மூன்றாவது சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் பென்கிச்சை எதிர்கொண்டார். இருவரும் தரவரிசையில் இல்லாதவர்கள். இத்தகைய சூழலில் பென்கிச் அதிரடியாக விளையாடி 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். அடுத்த சில நிமிடங்களில்  ஜப்பானின் ஒசாகா காயம் காரணமாக வெளியேறினார். இதனால் அதிர்ஷ்ட வாய்ப்புடன் சுவிட்சர்லாந்தின் பென்கிச் 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 4ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீராங்கனைகள்: சபலென்கா (பெலாரஸ்), கவுப் (அமெரிக்கா), படோசா (ஸ்பெயின்), வெக்கிச் (செக் குடியரசு).

பதவியை காப்பாற்ற தேவையில்லாத வேலை: 27 வயது வீரர் மீது பழி சுமத்தி தப்பிக்கும் கம்பீர்

பாஜக முன்னாள் எம்.பி., கவுதம் கம்பீர் சமீபத்தில்  இந்திய அணியின் தலைமை பயிற்சி யாளராக நியமிக்கப்பட்டார். அவரது மோசமான பயிற்சி மற்றும் ஆடும் லெவன் தேர்வு காரணமாக நியூசி லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது.  இத்தகைய சூழலில் கம்பீர் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமது பத வியை காப்பாற்றிக் கொள்ள கம்பீர் தேவையில்லாத கருத்துக்கள் மூலம்  கிரிக்கெட் விளையாட்டில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆய்வுக் குழு கூட்டத்தில், “இந்திய அணி ஏன் சரியாக செயல்பட வில்லை?” என்று கேள்வி கேட்டதற்கு தனது கையாளாகாத தனத்தை ஒப்புக் கொள்ளாத கம்பீர், வீரர்கள் மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது பிசிசிஐ-யிடம் புகார் தெரிவித்தார். இதன் காரணமாகவே பிசிசிஐ வீரர் களின் குடும்பத்தினர் வந்து செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. மேலும் அணியில் நடக்கும் விஷயத்தை இந்திய அணியின் இளம்  நட்சத்திர வீரர் சர்பிராஸ் கான் பத்திரிகையாளர்களிடம் சொல்வ தாக கம்பீர் பிசிசிஐயிடம் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து இருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்திய அணி ஏன் சரியாக செயல்படவில்லை என்று காரணம் கேட்டால், சம்மந்தம் இல்லாமல் அணியில் நடப்பதை சர்பிராஸ்கான் வெளியே சொல்கிறார் என்று கம்பீர் ஒரு இளம் வீரர் மீது பழியை சுமத்தி அவருடைய வாழ்க்கையே முடிக்க பார்ப்பதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.