ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2025 - அமெரிக்க வீரர் பிரிட்ஸ் அவுட்
113 ஆண்டுகால பழ மையான ஆஸ்தி ரேலிய ஓபன் கிராண்ட்ஸ் லாம் டென்னிஸ் தொடர் மெல் போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை அன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றை யர் பிரிவு 3ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பிரிட்ஸ், தரவரிசையில் இல்லாத முன்னணி வீரரான பிரான் சின் மோன்பில்சை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே பர பரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-6, 7-5, 7-6 (7-1), 6-4 என்ற செட் கணக்கில் மோன்பில்ஸ் வெற்றி பெற்று, 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். சூப்பர் பார்மில் உள்ள பிரிட்ஸ் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார். மற்றொரு அமெரிக்க இளம் வீரரான செல்டன் (தர வரிசை 21) தனது 3ஆவது சுற்று ஆட்டத்தில் இத்தாலி யின் முன்னணி வீரர்களுள் ஒருவரான முஸ்ஸெட்டியை (தரவரிசை 16) 6-3, 3-6, 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். தரவரிசையில் 19ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் காச்சாநோவ், தரவரிசையில் இல்லாத அமெரிக்காவின் மிச்செல்சன்னிடம் 3-6, 6-7 (5-7), 2-6 என்ற செட் கணக் கில் அதிர்ச்சி தோல்வியுடன் தொடரில் இருந்து வெளியே றினார். 4ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீரர்கள்: லோரன்சோ (இத்தாலி), டியன் (அமெரிக்கா), டி மினார் (ஆஸ்திரேலியா)
4ஆவது சுற்றில் ரைபைகினா
மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் ரைபைகினா, தரவரிசையில் 32ஆவது இடத்தில் உள்ள உக்ரைனின் டையானவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரைபைகினா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டையானவை புரட்டியெடுத்து 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 4ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீராங்கனைகள் : ஸ்வியாடெக் (போலந்து), கசட்கினா (ரஷ்யா), லிஸ் (ஜெர்மனி), நவர்ரோ (அமெரிக்கா), ஸ்விடோலினா (உக்ரைன்)
சாம்பியன்ஸ் டிராபி 2025... இந்திய அணி அறிவிப்பு
மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பி யன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் நாட்டில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டித் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள அணிகள் மட்டும் பங்கேற்கும் இந்த தொடரில், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் பாதுகாப்பு காரணங்க ளுக்காக துபாயில் நடைபெற உள்ளன. பிப்ரவரி 20 அன்று தனது முதல் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர் கொள்ள உள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக் கான இந்திய அணி சனிக்கிழமை அன்று அறிவிக்கப்பட்டன. வீரர்கள் விபரம் : ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஜெய்ஸ்வால், சப்மன் கில், ஸ்ரே யாஸ், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப், ஜாஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷதீப் சிங்.