games

img

விளையாட்டு...

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 2024 பாகிஸ்தானை வீழ்த்தி சீனா அபாரம்

ஆடவருக்கான ஆசிய சாம்பி யன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவின் ஹுலுன்புயர் நக ரில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா, சீனா, மலே சியா, ஜப்பான் ஆகிய 6 நாடு கள் பங்கேற்ற இந்த தொட ரில் இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா, சீனா ஆகிய 4 நாடுகள் அரையிறுதிக்கு முன்னேறின.  இந்நிலையில், திங்க ளன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - சீனா அணி கள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக  நடை பெற்ற இந்த ஆட்டத்தின் முழுநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தன. இதனால் பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. பெனால்டி சூட் அவுட்டில் அசத்தலாக செயல்பட்ட சீனா 2-0 என்ற கோல் கணக் கில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் வரலாற்றில் முதன்முறையாக இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது.  3 முறை சாம்பியன் அணியின் சோகம் கிரிக்கெட் விளையாட்டு உலகை போன்று ஹாக்கி விளையாட்டு உலகிலும் பாகிஸ்தான் நட்சத்திர அணியாக  ஜொலித்து வரு கிறது. இந்தியாவைப் போன்று பலம் வாய்ந்த அணி யான பாகிஸ்தான் ஹாக்கி அணி 3 முறை ஆசிய சாம்பி யன்ஸ் டிராபி (2012, 2013,  2018) கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், ஹாக்கி உலகில் இளம் அணிகளில் ஒன்றான சீனா விடம் தோல்வி கண்டு அரை யிறுதியுடன் பாகிஸ்தான் வெளியேறியுள்ளது ஹாக்கி உலகில் கடும் அதிர்ச்சி அலை யை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிற்கு குவியும் பாராட்டு ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் பல மான பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ள சீனாவிற்கு உலக நாடுகளின் விளை யாட்டு ரசிகர்கள் பாராட்டு களை பொழிந்து வரு கின்றனர்.

இறுதியில் இந்தியா

திங்களன்று மாலை நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - தென் கொரியா  அணிகள் மோதின. வழக்கமான அதிரடி ஆட்டத்தின் மூலம் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 6ஆவது முறையாக இறுதிக்கு முன்னேறியது. 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி தனது இறுதி ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது.

செஸ் ஒலிம்பியாட் : இந்திய ஆடவர் அணி கலக்கல்

45ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகளைக் கொண்ட இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஞாயிறன்று நடைபெற்ற (இந்திய நேரப்படி திங்களன்று அதிகாலை) 5ஆவது சுற்றில் இந்திய ஆடவர் அணி அஜர்பைஜான் அணியை எதிர்கொண்டது. வெள்ளை நிற காய்களுடன் ஆடிய இந்தியாவின் குகேஷ், அர்ஜூன் எரிகாசி ஆகியோர் சிறப்பாக விளையாடி தங்களது ஆட்டங்களில் வெற்றியை வசப்படுத்தி னர். அதே போல தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா  34ஆவது காய் நகர்த்தலில் நிஜாத் அப்சோவை டிரா செய்தார். இதன்மூலம் இந்திய ஆடவர் அணி அஜர்பைஜானை  வீழ்த்தி, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடர்ச்சியாக 5ஆவது வெற்றியை ருசித்து முன்னிலைபெற்றது.