மகளிர் உலகக்கோப்பை செஸ் கோப்பைக்கு பலப்பரீட்சை நடத்தும் இந்தியர்கள்
ஜார்ஜியாவில் மகளிர் செஸ் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் போட்டியாளராக இந்தியாவின் திவ்யா தேஷ்முக் தகுதி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியாளராக இந்தியாவின் கோனேரு ஹம்பியும் தகுதி பெற்றார். மகளிர் உலகக்கோப்பை செஸ் வரலாற்றில் இதுவரை இந்தியர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறாத நிலையில், இந்த முறை இரு இந்தியர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர். திவ்யா தேஷ்முக் - கோனேரு ஹம்பி மோதும் இறுதிச்சுற்றின் முதல் கேம் சனிக்கிழமை (ஜூலை 26) அன்றும், 2ஆவது கேம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) அன்றும் நடைபெறவுள்ளன. தேவையேற்பட்டால் டை-பிரேக்கர் திங்கள்கிழமை (ஜூலை 28) அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.