பாராலிம்பிக்கில் ஆடவருக்கான(SL4) தனிநபர் பேட்மின்டன் போட்டியில், இந்தியாவின் சுஹாஸ் எல். எத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஆடவருக்கான(SL4) தனிநபர் பேட்மின்டன் போட்டியில் பிரான்ஸ் வீரர் லூகாஸை 9க்கு 21, 13 க்கு 21 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து, இந்தியவின் சுஹாஸ் எல். எத்திராஜ் வெள்ளி வென்று சாதித்துள்ளார்.
இடது கணுக்காலில் குறைபாட்டுடன் பிறந்த சுஹாஸ் எத்திராஜ்(41), 2007-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்த அதிகாரியாவார். சுஹாஸ் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பதன் மூலம், பாரீஸ் பாராலிம்பிக்ஸ் பாட்மின்டன் போட்டிகளில் இந்தியா மொத்தம் 4 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகளிருக்கான தனிநபர் பிரிவு பேட்மின்டனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், மணிஷா ராமதாஸ் வெண்கலமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.