வியாழன், செப்டம்பர் 23, 2021

games

img

18 வயதில் அமெ.ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற எம்மா ரடுகானு....

44 ஆண்டுகளுக்குப் பின் மகளிர் பிரிவில் பிரிட்டனை சேர்ந்தஎம்மா ரடுகானு.  அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் வென்று முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் ,

தன்னை எதிர்த்து விளையாடிய லேலா ஃபர்னாண்டஸை 6-4, 6-3 என நேர் செட்களில் வீழ்த்தி, தொடரை தனதாக்கிக் கொண்டார் எம்மா. இந்த தொடருக்கு முன் உலக தர வரிசையில் 150ஆவது இடத்தில் இருந்தார்.இந்த வெற்றி மூலம், உலக அளவில் மகளிர் வீராங்கனைகள் பட்டியலில் 23ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறார். அத்துடன் பிரிட்டனின் நம்பர் 1 வீராங்கனையாகியுள்ளார்..

1977ஆம் ஆண்டு வெர்ஜீனியா வேட் என்பவர் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரை வென்றது தான் பிரிட்டனின் கடைசி கிராண்ட் ஸ்லாம் வெற்றி.வெர்ஜீனியா வேட் தான் 1968ஆம் ஆண்டு அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரை வென்றிருந்தார். 
சீனத்தாய்க்கும் ரோமேனிய தந்தைக்கு  கனடாவில் பிறந்த எம்மா ரடுகானு, தன் பெற்றோருடன் தனது இரண்டாவது வயதில் பிரிட்டனுக்கு வந்தார்.தென்கிழக்கு லண்டனில் ப்ரோம்லி டென்னிஸ் அகாடமியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது ஐந்து.

உலகிலேயே மிக இளம் வயதில் கிராண்ட் ஸ்லாம் வென்ற வீராங்கனை (2004-ல் மரியா ஷரபோவாவின் சாதனை முறியடிப்பு),3. மிக இளம் வயதில் கிராண்ட் ஸ்லாம் வென்ற பிரிட்டன் வீராங்கனை,ஒரு செட் கூட விட்டுக் கொடுக்காமல், அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் தொடரை வென்ற இளம் வயது வீராங்கனை (2014-ல் செரீனா வில்லியம்ஸின் சாதனை முறியடிப்பு)... என ஒரு வெற்றி மூலம் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார் எம்மா ரடுகானு.பிரிட்டனின் ராணி எலிசபெத், எம்மா ரடுகானுவின் வெற்றிக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.சமூக வலைதளங்களில் எம்மாவின் வெற்றியை பல நாட்டவர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். 

;