games

img

சென்னை டபிள்யு.டி.ஏ ஓபன் டென்னிஸ் காலிறுதி ஆட்டங்கள் தொடக்கம்

17 வயதில் மிரட்டும் கத்துக்குட்டி

உலக தரவரிசையில் 130-ஆம் இடத்தில் உள்ள செக்குடியரசின் லின்டா புருவிர்டோவா (17 வயது) தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் சென்னை மைதானத்தை மிரட்டி வருகிறார். 2-வது சுற்று ஆட்டத்தில் ரெபக்கா பீட்டர்சனை (சுவீடன்) 6-4, 6-2 என்ற நேர் செட்டில் புரட்டியெடுத்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அனுபவத்தில் சீனியரான ரெபக்காவை மிக எளிதாக வீழ்த்தியதன் மூலம் நடப்பு சென்னை டபிள்யு.டி.ஏ தொடரில் கவனிக்கக்கூடிய நபராக இருக்கிறார் லின்டா புருவிர்டோவா.

டென்னிஸ் உலகின் முக்கிய தொடரான டபிள்யு.டி.ஏ (WTA - Women’s Tennis Association) தொடரின் 7-வது சீசன் சென்னை  நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி (SDAT - Sports Development Authority of Tamil Nadu Tennis Stadium) மைதானத்தில் நடை பெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள  நிலையில், ஒற்றையர் பிரிவில் வெள்ளியன்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகிறது. வியாழனன்று மாலை 5 மணி நிலவரப்படி கனடாவைச் சேர்ந்த மரினோ, பவுச்சர்ட் மற்றும் ஜப்பானின் ஹிபினோ செக் குடியரசின் லிண்டா ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர். இதேபோல  இரட்டையர் பிரிவில் வெள்ளியன்று அரையிறுதி ஆட்டங்கள் (தோராயமாக) தொடங்க உள்ளன.

இந்திய நட்சத்திரங்கள் சொதப்பல்

பதக்கம் வெல்வார் என கணிக்கப்பட்ட இந்தியாவின் அங்கிதா ரெய்னா முதல் சுற்றிலேயே நடையை கட்டினார். மற்றொரு இந்திய வீராங்கனை கர்மன் கவுர் முதல் சுற்றில் செக்குடியரசு வீராங்கனை சிலோவை  புரட்டியெடுத்து 2-வது சுற்றுக்கு முன்னறிய நிலையில், 2-வது சுற்றில் கனடாவின் பவுச்சரிடம் கர்மன் கவுர் வீழ்ந்தார். இரட்டையர் பிரிவில் எதிர்பார்த்த அளவில் இந்திய வீராங்கனைகள் செயல்படவில்லை. ருதுஜா -  கர்மன் கவுர் ஜோடி மட்டுமே காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது (மாலை  5 மணி நிலவரம்). மற்ற வீராங்கனைகள் 2-வது சுற்றிலேயே வெளியேறினர்.