games

img

அங்கிதாக்களின் வெற்றிப் பயணம்! “காலம் கடந்து நிற்கும் புகழ், கடின உழைப்பின் வெற்றி” - ஸ்ரீராமுலு

அங்கிதாக்களின் வெற்றிப் பயணம்! “காலம் கடந்து நிற்கும் புகழ், கடின உழைப்பின் வெற்றி”

இந்திய விளையாட்டு வரலாற் றில் அங்கிதா என்ற பெயர் இரண்டு துறைகளில் பெருமையுடன் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தட களத்தில் அங்கிதா தியானியும், டென்னிஸில் அங்கிதா ரெய்னாவும் தங்கள் சாதனைகளால் நாட்டுக்கு பெரு மை சேர்த்து வருகின்றனர்.  இந்த இரு வீராங்கனைகளும் தங்கள் கடின உழைப்பால் சாதனையின் விளக்கை ஏற்றியுள்ள னர்.

வெற்றிக் கொடி

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் தடகளப் போட்டியில் 23 வயதான அங்கிதா தியானி அற்புதமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். பெண்கள் 2000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் 6 நிமி டங்கள் 13.92 வினாடிகளில் ஓடி புதிய தேசிய சாதனையைப் படைத்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.  பரூல் சவுத்ரியின் முந்தைய சாதனையான 6 நிமிடங்கள் 14.38 வினாடி களை முறியடித்த இந்த வெற்றி, உலக தடகள  வரலாற்று மேலும் ஒரு மைக்கில் ஆகும்.

மலையகத்தில் முளைத்த கனவு

உத்தரகாண்ட் மாநிலத்தின் பவுரி  கர்வால் மாவட்டத்தில் உள்ள மரோடா  கிராமத்தைச் சேர்ந்த அங்கிதா,  1,400 மீட்டர் உயரத்தில் வளர்ந்தார். ராணுவத் தேர்வுகளுக்குத் தயாராகும் சிறுவர்களுடன் பயிற்சி பெற்ற அவ ரது ஆரம்பக் கட்டம், இன்றைய வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. “மரம் வளர வேண்டுமானால் வேர் ஆழமாக இருக்க வேண்டும்” என்ப தற்கு சிறந்த உதாரணம் அவரது பயணம்.

வாழ்க்கையின் பரிணாமம்

2018இல் விஜயவாடாவில் 200  மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றதுடன் தொடங்கிய அங்கிதாவின் பயணம், படிப்படியாக நீண்ட தூர ஓட்டங்களை நோக்கி நகர்ந்தது. 2021இல் 5,000 மீட்டர் ஓட்டத்தில் ஜூனியர் தேசிய சாதனை படைத்த அவர், கென்யாவின் நைரோபியில் நடந்த உலக யு-20 சாம்பியன்ஷிப்பில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். சீனியர் பிரிவில் 2022 முதல் தொட ர்ந்து வெற்றிகள் பெற்று வரும் அங்கிதா,  2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 5000 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று மகத்தான அனு பவம் பெற்றார். தெஹ்ரானில் நடந்த ஆசிய உட்புற சாம்பியன்ஷிப்பில் 3000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்க மும், சமீபத்தில் உலக பல்கலைக்கழக போட்டிகளில் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸில் வெள்ளிப் பதக்கமும் வென்று ள்ளார்

மாமணி

1993இல் பிறந்த அங்கிதா ரெய்னா, 2018 முதல் தொடர்ந்து இந்தியாவின் நம்பர் ஒன் பெண் டென்னிஸ் வீரராக இருந்து வருகிறார். பன்னாட்டு டென் னிஸ் கூட்டமைப்பின் பல சுற்றுப் போட்டிகளில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் வெற்றிகள் பெற்றுள்ளார். பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் 125 கே இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற சிறப்பையும் பெற்றுள் ளார். 2018 பெட் கோப்பை போட்டியில் சீன மற்றும் கஜகிஸ்தான் வீராங்கனை களை தோற்கடித்து இந்தியாவுக்காக பங்களிப்பு செய்த அங்கிதா, பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலும் கலந்து கொண்டுள்ளார். ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஒற்றையர் பதக்கம் வென்ற இந்தியப் பெண்களில் அங்கிதா ரெய்னா மற்றும் சானியா மிர்சா மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2021இல் அர்ஜுனா விருது பெற்ற பெருமையும் அவரைச் சேர்ந்தது.

எதிர்கால நம்பிக்கை

அங்கிதா தியானியின் ஜெருசலேம் வெற்றி, டோக்கியோவில் நடைபெற இருக்கும் உலக சாம்பியன்ஷிப்பில் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டிக் கான தகுதி வாய்ப்புகளை கணிசமாக அதிகரித்துள்ளது.  தற்போதைய உலக தர வரிசை விதியின்படி, 2000  மீட்டர் ஸ்டீபிள் சேஸில் கிடைக்கும் செயல்திற னை 3000 மீட்டர் போட்டிக்கான தரவரி சையில் கணக்கிட அனுமதிக்கப்படுவ தால், அவரது கனவு நனவாகும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. “இந்த இரண்டு அங்கிதாக்களும் தங்கள் தொடர் முயற்சிகளால் வெற்றி யின் கனிகளைப் பறித்துள்ளனர். மலை யக பின்னணியில் இருந்து உலக அரங்கில் பிரகாசிக்கும் அங்கிதா தியானியின் கதையும், நாட்டின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராக தொடர்ந்து இருந்து வரும் அங்கிதா ரெய்னாவின் நிலைத்த செயல்பாடும், கடின உழை ப்பும் அர்ப்பணிப்பும் எப்படி வெற்றி யின் உச்சத்திற்கு இட்டுச் செல்ல முடி யும் என்பதற்கு சிறந்த உதாரணங் களாக திகழ்கின்றன. இந்திய விளை யாட்டு உலகம் இந்த இரு வீராங்கனை களிடமும் பெரும் நம்பிக்கை வைத்துள்ளது. அவர்களது எதிர்கால சாதனைகள் நம் நாட்டின் விளை யாட்டுப் பெருமையை மேலும் உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.