games

img

விளையாட்டு...

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து  அமெரிக்கா திணறல்

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 9-வது சீசன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று நடைபெற்ற “குரூப் இ” பிரிவிற்கான லீக் ஆட்டத்தில் அமெரிக்கா - நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. யாரும் எதிர்பாராத வகையில் ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீராங்கனை ஜில் கோலடிக்க அமெரிக்கா அதிர்ச்சியில் உறைந்தது. இரண்டாம் பாதியில் அமெரிக்கா வீராங்க னை லிண்ட்ஸே (62’) கடும் போராட்டத்து க்கு இடையே கோலடிக்க ஆட்டம் பரபர ப்பானது.  அதன்பிறகு இரு அணிகளும் கோலடிக்க முயற்சி செய்தும் கோலடிக்க முடியவில்லை. இறுதியில் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் நிறைவடைந்தது.  4 முறை சாம்பியனான அமெரிக்கா நடப்பு சீசனில் சற்று திணறலான ஆட்ட த்தை வெளிப்படுத்தி வருகிறது. முக்கிய மாக கோலடிக்க முடியாமல் அமெரிக்க வீராங்கனைகள் கடுமையாக திணறி வருகின்றனர் என்பதற்கு நெதர்லாந்து அணியுடனான ஆட்டமே சாட்சியாகும். 

இன்றைய ஆட்டங்கள்

அர்ஜெண்டினா - தென் ஆப்பிரிக்கா
நேரம் : அதிகாலை 5:30 மணி 

இங்கிலாந்து-டென்மார்க்
நேரம் : மதியம் 2:00 மணி

சீனா-ஹைத்தி
நேரம் : மாலை 4:30 மணி

சேனல் : தூர்தர்சன் ஸ்போர்ட்ஸ், பேன்கோடு (ஒடிடி)

பாரீஸ்
சவூதி அரேபிய கிளப்பில் விளையாட மாப்பே மறுப்பு
சீசனுக்கு ரூ.2700 கோடி அளிக்க முன்வந்தது அல் ஹிலால் அணி

கால்பந்து உலகில் மெஸ்ஸி (அர்ஜெண்டினா), ரொனால்டோ (போர்ச்சுக்கல்), நெய்மார் (பிரேசில்) ஆகியோருக்கு அடுத்தப்படியாக நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர் பிரான்ஸ் அணியின் கேப்டன் கிலியான் மாப்பே (24). இவர் தற்பொழுது பிரான்ஸ் கிளப் அணியான பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிக்காக விளையாடி வருகிறார். பிஎஸ்ஜி அணியுடன் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் மீத முள்ள நிலையில், மேலும் ஒரு வரு டத்திற்கான ஒப்பந்தத்தை நீட்டிக்க அந்த அணி விரும்பியது. ஆனால் மாப்பே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புவதாகவும்,  பிஎஸ்ஜி-யின் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை என வெளிப்படையாக கூறினார். இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் முடி வடைந்த பிறகு ப்ரீ டிரான்ஸ்பர் முறை யில் ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில், சவூதி அணியான அல்- ஹிலால் பிஎஸ்ஜி-யுடன் பேச்சு வார்த்தை நடத்தி, சீசனுக்கு 332 மில்லி யன் டாலர் (இந்திய பண மதிப்பில் 2700 கோடி ரூபாய்) ப்ரீ டிரான்ஸ்பர் முறையில் மாப்பேவை விலைக்கு வாங்க முன்வந்தது. மேலும் அல்-ஹிலால் அணி நிர்வா கம் மாப்பேவை சந்திக்க பிரான்ஸ் சென்றுள்ளனர். ஆனால் மாப்பே அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.  அல்-ஹிலாலுக்கு இரட்டை அடி ஏற்கனவே சவூதி கிளப் அணியான அல்-ஹிலால் அணி பிரம்மாண்ட தொகையுடன் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய விரும்பியது. ஆனால் மெஸ்ஸி அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு சென்று அங்கு விளையாடி வருகிறார். தற்பொழுது மாப்பேவை இழுக்க முயற்சித்து இரட்டை வாங்கியது அல்-ஹிலால் அணி.

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் : காலிறுதியில் இந்திய ஜோடி

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அந்நாட்டு தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, டென்மார்க்கின் லஸ்ஸி - பே ஜோடியை 21-17, 21-11 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி அசத்தியது.  காலிறுதியில் சீன தைபேயின் லீ - வாங் ஜோடியை எதிர்கொள் கிறது இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி. 

 

;