கேப் டவுன்
தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடரின் முதல் 2 ஆட்டங்களில் அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், டைசி டி-20 போட்டி நாளை (செவ்வாய்) இரவு கேப் டவுனில் நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், ஆறுதல் வெற்றியை ருசிக்கும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா அணியும் களமிறங்குதால் இந்த போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்டுகிறது.
மைதானம் நியூலாண்ட், கேப்டவுன் நகரம்
நேரம் : இரவு 9:30 மணி (இந்திய நேரம்)