games

img

விளையாட்டு செய்திகள்

மழையால் ஆட்டம் ரத்து வெளியேறியது இலங்கை

9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடரின் “குரூப் டி” பிரிவில் உள்ள இலங்கை - நேபாளம் அணிகளுக்கு இடையேயான லீக்  ஆட்டம் இந்திய நேரப்படி புதனன்று காலை (அமெரிக்க நேரப்படி செவ்வா யன்று இரவு) அமெரிக்காவின் புளோ ரிடா நகரில் நடைபெற்றது. இந்த ஆட் டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலை யில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

விளையாடாமல் புள்ளிகள் கிடைத்து இருப்பது நேபாள அணிக்கு சாதகத்தை ஏற்படுத்தினாலும், இலங்கை அணிக்கு கடும் சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இதுவரை தான் விளையாடிய 3 ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்களில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது. 

இதனால் நேபாள அணியை வீழ்த்தி “சூப்பர் 8” சுற்றுக்கு செல்ல எதாவது வாய்ப்பு கிடைக்குமா? என எதிர்பார்த்து இலங்கை களமிறங்கிய நிலையில், இந்த எதிர்பார்ப்பையும் மழை காவு வாங்கியுள்ளது.

3 போட்டிகளில் விளையாடி 2 ஆட்டத்தில் (தென் ஆப்பிரிக்கா, வங்க தேசம்) தோல்வி, ஒரு டிரா என ஒரு புள்ளி களுடன், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள இலங்கை அணி “சூப்பர் 8” சுற்றுக்கு முன்னேறுவது கானல் நீரைப் போன்றுதான். தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி, மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகள் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புடன் “சூப்பர் 8” கிடைக்க லாம். ஆனால் “குரூப் டி” பிரிவு நிலவரப்படி இலங்கை அணிக்கு 90% வாய்ப்பில்லை.

சூப்பர் 8இல் ஆஸ்திரேலியா

“குரூப் பி” பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா - நமீபியா அணிகள் மோதிய ஆட்டம் புதனன்று காலை ஆன்டிகுவாவில் (பார்படாஸ்)  நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி “சூப்பர் 8” சுற்றுக்கு தகுதி பெற்றது. (ஸ்கோர் கார்டு : நமீபியா 72-10(17), ஆஸ்திரேலியா 74/1 (5.4))

இருக்குற பிரச்சனைல இது வேற

மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா நாடுகளில்  கூட்டாக நடைபெற்று வரும் 9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடர் மைதா னத்தின் தன்மையால் சுவாரஸ்யமின்றி நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள  மைதானங்களின் கடின தன்மை காரணமாக ரன் குவிப்புக்கு  சாதகம் இல்லா சூழல் உள்ளது. இதனால் அதிரடிக்கு அர்த்தம் தெரியாமல் 9ஆவது சீசன் டி-20 உலகக்கோப்பை தொடர் பல்வேறு பிரச்சனைகளுடன் நகர்ந்து வரும் நிலையில், ரசிகர்களால் புதிய பிரச்சனை வேறு குடைச்சலை ஏற்படுத்தி வருகிறது. 

அது யாதெனில் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் ஆப்பிரிக்கா நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள், தங்கள் நாட்டு  வீரர்களை உற்சாகப்படுத்துவதாகக் கூறி,  பிரம்மாண்ட ஊதுகுழலை (பீப்பி) வைத்து  ஊதி வருகின்றனர். லாரிகளில் பயன் படுத்தப்படும் ஹாரன் ஒலிக்கு நிகராக உள்ள இந்த ஊதுகுழலை ரசிகர்கள் ஊதும் பொழுது, மைதானத்துக்குள் ஏதோ லாரி தான் வந்துவிட்டது என்பது போல மற்ற நாட்டு ரசிகர்கள்  மிரண்டு பதற்றத்துடன் பார்க்கி ன்றனர். ஊதுகுழல் சப்தத்தை கேட்டு பழக்கப்படாத வெளி நாட்டு சிறுவர்கள், குழந்தைகள் மைதானத்தில் கதறி அழுக  ஆரம்பித்து விடுகின்றனர். வயது முதிர்ந்தவர்கள், இதய  நோய் உள்ளவர்கள் பதற்றம் அடைகிறார்கள். ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளுடன் 9ஆவது சீசன் உலகக் கோப்பை  நகர்ந்து வரும் நிலையில், இந்த பீப்பி (ஊதுகுழல்) வேறு புதிய பிரச்சனையை கிளப்பி வருகிறது.

இன்றைய ஆட்டம்

மேற்கு இந்தியத் தீவுகள் - நியூசிலாந்து
இடம் : டிரினினாட், மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : காலை 6 மணி

வங்கதேசம் - நெதர்லாந்து
இடம் : கிங்ஸ்டவுன், மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : இரவு 8 மணி
 

;