வியாழன், செப்டம்பர் 23, 2021

games

img

சர்வதேச ஒரு நாள் ஆட்டத்தில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர் அடித்து சாதனை படைத்த வீரர் 

சர்வதேச ஒரு நாள் ஆட்டத்தில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ளார் அமெரிக்க வீரர் ஜஸ்கரன் மல்ஹோத்ரா . 

அமெரிக்கா-பப்புவா நியூ கினியா இடையிலான ஒருநாள் ஆட்டம் ஓமன் அல் அமீரத் மைதானத்தில் நடைபெற்றது  . இந்த ஆட்டத்தில்  முதலில் விளையாடிய அமெரிக்கா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது . இதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜஸ்கரன் மல்ஹோத்ரா 124 பந்துகளில் 16 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளுடன் , 173 ரன்கள் எடுத்து அசத்தினார் . மேலும், அமெரிக்க இன்னிங்சின் கடைசி ஓவரில் ஜஸ்கரன் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார். 

இதற்கு முன்பு ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவின் கிப்ஸ் மட்டுமே  ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்திருந்தார். தற்போது , ஜஸ்கரனும் அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

இந்த ஆட்டத்தில் கடினமான இலக்கை எதிர்கொண்ட பப்புவா நியூ கினியா , 37.1 ஓவர்களில் , 137 ரன்களுக்கு தோல்வியடைந்தது. 

;