ஆஸ்திரேலியாவில் நடை பெற்று வரும் 22-வது சீசன் உலகக்கோப்பை தொடரில் ஐரோப்பா கண்டத்தில் இருந்து 4 அணிகள் (இங்கி லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து) பங்கேற்றன. இதில் இங்கிலாந்து சீனியர் அணி என்பதால் அந்த அணியின் ஆட்ட திறன், வெற்றி பற்றி பேச வேண்டியதில்லை. ஆனால் மற்ற 3 (அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து) அணிகளும் கடந்த காலங்களை விட நடப்பாண்டில் மிகவும் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளன. ஸ்காட்லாந்து ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி னாலும் சீனியர் அணிகளின் வெற்றி யால் தகுதி சுற்றில் வெளியேறியது. “சூப்பர் 12” சுற்றுக்கு தகுதி பெற்ற அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் எதிரணிகளை விழிபிதுங்க வைத்துள்ளது.
அயர்லாந்து மிகவும் பலமான அணியும், முன்னாள் டி-20 சாம்பியன் அணியுமான இங்கிலாந்தை வீழ்த்தி கிரிக்கெட் உலகிற்கு அதிர்ச்சி வைத்தி யம் அளித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட குரூப் 1 புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் கம்பீரமாக அமர்ந்து அரையிறுதி வாய்ப்பு கிடைக்க எந்த அணியை துவம்சம் செய்வோம் என தீவிர பயிற்சியில் உள்ளது. நெதர்லாந்து அணி “சூப்பர் 12” ஆட்டங்களில் பெரியளவு வெற்றியை குவிக்கவில்லை என்றாலும், பலமான அணியோ, பலம் குறைந்த அணியோ எது வாக இறந்தாலும் தாக்குதல் ஆட்டத்து டன் எதிரணியை திக்கு முக்காட வைக் கிறது. இதற்கு முக்கிய எடுத்துக்காட்டு பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் அளவிற்கு அனுபவம் கொண்ட ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அசத்தியது தான். நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய அணிகள் உணர்த்துவது என்னவென்றால் எங்க ளால் கோப்பையை கைப்பற்ற முடியாது என்றாலும், என்றாவது ஒருநாள் கோப்பையை கைப்பற்றுவோம். அதன் தொடக்க புள்ளிதான் இது என்ற நோக்கில் மிக அருமையாக விளையாடியுள்ளார் கள் ஐரோப்பாவின் கத்துக்குட்டி கிரிக்கெட் அணிகள். கால்பந்து எப்படி ஐரோப்பா கண்டத்தின் சொத்தாக இருக்கிறதோ, அதே போல கிரிக்கெட்டும் ஒருநாள் அவர்களின் சொத்தாக மாறும் சாதக மான சூழல் உள்ளது.
நெதர்லாந்து அபாரம்
ஜிம்பாப்வே அணிக்கெதிரான “சூப்பர் 12” சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. (ஸ்கோர்:ஜிம்பாப்வே 117 (19.2), நெதர்லாந்து 120/5 (18))
இன்றைய ஆட்டம்
பாகிஸ்தான் -
தென் ஆப்பிரிக்கா
இடம் : சிட்னி
நேரம்: மதியம் 1:30 மணி
மழை வருமா?
சிட்னி நகரில் வியாழனன்று வானிலைப்படி 16 டிகிரி செல்சியஸ் அளவில் மிக மந்தமான அளவில் வெப்பநிலை இருக்கும். மதியத்திற்கு மேல் குளிர்ந்த வானிலையுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதால் லேசான அளவில் (40%) மழைக்கு வாய்ப்புள்ளது.