இந்திய அணி அபார வெற்றி
டோமினிகா டெஸ்ட்
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண் டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் டோமினிகாவில் கடந்த புதனன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினின் (5 விக்) பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கு இந்தியத் தீவுகள் 64.3 ஓவர்க ளில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் (171), ரோஹித் (101), கோலி (76) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 152.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. 271 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கு இந்தி யத் தீவுகள் அணி மீண்டும் அஸ்வின் (7 விக்.,) பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 50.3 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. இதன்மூலம் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது. 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற முன்னிலையில் உள்ளது. 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் வரும் ஜூலை 20 அன்று தொடங்குகிறது.
விம்பிள்டன் கோப்பை யாருக்கு?
ஜோகோவிச் - அல்காரஸ் இன்று மோதல்
அதிக பரிசுத்தொகை கொண்ட கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரும், 146 ஆண்டுகால பாரம்பரிய மிக்க டென்னிஸ் தொடர்களில் முக்கியமானதுமான விம்பிள் டன் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறும் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 23 கிராண்டஸ்லாம் பட்டம் வென்றவரும் செர்பிய நாட்டவருமான ஜோகோவிச்சும், ஸ்பெயினின் அதிரடி இளம் வீரர் அல்காரஸும் மோதுகின்றனர்.
யாருக்கு வாய்ப்பு?
இருவரும் அதிரடி வீரர்கள் என்பதால் யாருக்கு கோப்பை என திடமாக எதுவும் கூற முடியாது. ஆனால் ஜோகோவிச் விம்பிள்டன் மண்ணில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்ற அனுபவம் உடையவர். இது அவருக்கு சாதகத்தை ஏற்படுத்தலாம் என்றாலும், தற்போதைய நிலை யில் அல்காரஸ் டென்னிஸ் உலகில் முதலிடத்தில் பிரம்மாண்ட அதிரடி ஆட்டத்துடன் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறார். இதனால் அவருக்கும் கோப்பை வெல்ல சாதகமான சூழல் உள்ளது. அலகாரஸ் கடந்த (2022) அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். இதுவே அவருக்கு முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். மேலும் முதல் முறையாக விம்பிள்டன் தொடரில் இறுதிக்கு முன்னேறியுள்ளார் அல்காரஸ். முதல் முறையாக விம்பிள்டன் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் அல்கா ரஸும், 7-வது முறையாக விம்பிள்டன் கோப்பையை கைப்பற்றி 24 முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் முனைப்பில் ஜோகோவிச்சும் என இரு வீரர்களும் கோப்பையின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகோவிச் - அல்காரஸ்
நேரம் : மாலை 5:00 மணிக்கு மேல் (தோராயமாக)
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார்
பரிசுத்தொகை
சாம்பியன் - ரூ.25 கோடி (23 லட்சம் பவுண்ட்)
2-ஆம் இடம் - ரூ. 12 கோடி (11 லட்சம் பவுண்ட்)
எவியன் குடிநீர் பற்றி தெரியுமா?
நடப்பு சீசன் விம்பிள்டன் தொ டரில் வீரர் - வீராங்கனைக ளுக்கான குடிநீர் ஸ்பான்சரை பிரான்ஸ் மினரல் நிறுவனமான எவியன் (evian) கவனித்து வருகிறது. பல்வேறு தாது உப்புகள் அடங்கிய இந்த எவியன் குடி நீர் ஆல்ப்ஸ் மழையின் பனிப்பாறைக ளில் இருந்து வரும் பனிநீரை இயற்கை யாக வடிகட்டி, எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் தாதுக்களால் செறிவூட்டப்பட்டு தயாரிக்கப்படுகிறது. அதிக ஊட்டச்சத்து இருப்பதால் வீரர்- வீராங்கனைக ளின் பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாகவே சிறப்பு செலவு கள் மூலம் எவியன் குடிநீரை களமிறங்கி யுள்ளது விம்பிள்டன் நிர்வாகம்.
விலை?
இந்தியாவில் ஒரு லிட்டர் எவியன் குடிநீரின் விலை ரூ.225 ஆகும். இங்கிலாந்தில் அரை லிட்டர் 2.50 பவுண்டுக்கு (ரூ.268) விற் கப்படுகிறது. வீரர் - வீராங்கனைகளு க்கு மட்டுமே எவியன் குடிநீரை இலவச மாக வழங்குகிறது விம்பிள்டன் நிர்வா கம். பார்வையாளர்களுக்கு கிடையாது.