games

img

தமிழ்நாட்டில் இன்று உலகக்கோப்பை கிரிக்கெட்

விளையாட்டு உலகில் முக்கிய தொடர்களில் ஒன்றான கிரிக்கெட் உலகக்கோப்பையின் 13-ஆவது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.நவம்பர் 19 வரை 10 நகரங்களில் நடைபெறும் இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், வெள்ளியன்று நடைபெறும் 11-ஆவது லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.  தமிழ்நாடு தலைநகர் சென்னையில் நடைபெறவுள்ள இந்த  ஆட்டத்தின் மூலம் 3-ஆவது வெற்றியை ருசித்து புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் முனைப்பில் நியூஸிலாந்து அணியும்,  இரண்டாவது வெற்றியை ருசிக்கும் முனைப்பில் வங்கதேச அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குகிறது.  இதனால் சென்னையில்  நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூஸிலாந்து - வங்கதேசம்
நேரம்  :  மதியம் 2:00 மணி 
இடம் : எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, தமிழ்நாடு 
மழை : 60% வாய்ப்புள்ளது

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஒடிடி : ஹாட் ஸ்டார் (இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும், ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)