games

img

ஆஸி., அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வரலாற்று சாதனை....

பிரிஸ்பேன்:
இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள்,டி-20, டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.  

ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்ற, டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றி பதிலடிகொடுத்த நிலையில், சுற்றுப்பய ணத்தின் கடைசி நிகழ்வான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 3-ஆம் வாரத்தில் தொடங்கி யது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெல்ல, 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.  3-ஆம் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் கடந்த வாரம் தொடங்கியது. டாஸ்  வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் குவித்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 336 ரன்கள் குவிக்க ஆட்டம் பரபரப்பானது.

இந்திய அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, வெற்றி இலக்காக இந்தியஅணிக்கு 328 ரன்கள் நிர்ணயிக்கப் பட்டது. சற்று கடினமான இலக்காக இருந்தாலும் சப்மன் கில் (91 ரன்கள்), பண்ட் (89), புஜாரா (56) ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் குவித்து புதிய வரலாறுடன் தொடரை  2-1 கைப்பற்றி தொடர்ந்து 2வது முறையாக ‘பார்டர்-கவாஸ்கர்’ கோப்பை யை வென்று  புதிய வரலாறு படைத்தது. இதில் முக்கிய சாதனை, ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாக திகழும் காபா (பிரிஸ்பேன்) மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது தான். இந்த மைதானத்தில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இம்மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி 32 வருடமாக தோல்வி கண்டது கிடையாது என்பது தான் வரலாற்றுச் செய்தி. தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசளிக்கப்படுவ தாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சாம்பியன்ஷிப் தரவரிசையில் 430 புள்ளிகளுடன், 71.7 சதவீத வெற்றியுடன் முதலிடத்துக்கு முன்னேறி யுள்ளது.