2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 19-வது சீசன் ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் ஆக்லாந்து சிட்டி (ஓசியானியா சாம்பியன்) வெளியேறிய நிலையில், 2-வது சுற்று ஆட்டத்தில் வியாதத் கசப்லன்கா (ஆப்பிரிக்க சாம்பியன்). சீட்டல் சவுண்டர்ஸ் (அமெரிக்க சாம்பியன்) ஆகிய அணிகளும் வெளியேறியது. சுற்று ஆட்டங்கள் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அல் ஹிலால் (ஆசிய சாம்பியன்), அல் அக்லி (ஆப்பிரிக்க ரன்னர்) ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில், புதனன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அல் ஹிலால் அணி, பிளமிங்கோ (தென் அமெரிக்கா) அணியையும், வியாழனன்று நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் அல் அக்லி அணி, ரியல் மாட்ரிட் (ஐரோப்பிய சாம்பியன்) அணியை எதிர்கொள்கிறது.