games

img

உலகக்கோப்பை தொடருக்காக சுவிஸ் அட்டர்னி ஜெனரலை உளவு பார்த்த கத்தார்

22வது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2022-ஆம் ஆண்டு கத்தார் நாட்டில் நடைபெறும் என பிபா 2010-ஆம் ஆண்டு அறிவித்தது. மைதான விவகாரம், கால்பந்து விளையாட்டின் தேசிய செயல்பாடு, சீதோஷ்ண நிலை, என பல்வேறு சிக்கல் உள்ள நிலை யில், கத்தார் நாட்டிற்கு எப்படி உல கக்கோப்பை தொடர் கொடுக்கப் பட்டது என பல்வேறு சர்ச்சைகள் உருண்டோடின. இந்த சர்ச்சைகளால் கிட்டத் தட்ட 2016-ஆம் ஆண்டில் கத்தா ருக்கு வழங்கப்பட்ட உலகக் கோப்பை ரத்து செய்யப்படலாம் என அறிவிப்புகள் வெளியானது. இந்த காலகட்டத்தில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) நெருங்கிய தொடர்பும், சம்மேளனத்தில் நடைபெறும் சிக்கல், புகார், ஊழல் போன்ற வற்றை விசாரணை மூலம் கையா ளும் முக்கிய நபரான சுவிட்சர் லாந்து நாட்டின் அட்டர்னி ஜென ரலாக இருந்த மைக்கேல் லாபரை (ஓய்வு - நீக்கம் செய்யப்பட்டார்) உளவு பார்த்துள்ளது கத்தார். உலகக்கோப்பை ரத்து செய்யும் விவகாரம் மைக்கேல் லாபருக்கு நன்றாக தெரியும் என திட்டம் வகுத்து 5 ஆண்டுகளுக்கு மேலாக கத்தார் உளவுத்துறை உளவு பார்த்துள்ளதாக ஐரோ ப்பிய வார இதழான என்இசட் இசட் அம் சோன்டாக் (NZZ AM SONTAK) செய்தி வெளியிட்டுள் ளது. இந்த செய்தியால் சுவிஸ் - கத்தார் இடையே மோதல் போக்கு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சர்ச்சை கடலில் கரையேற முடியாமல் தவிக்கும் கத்தார்

கால்பந்து விளையாட்டு பின்புலம் இல்லாமல், மைதானங்களே இல்லாமல், சீதோஷ்ண நிலை உத்தரவாதம் இல்லாமல், லஞ்சம் மூலம் உலகக்கோப்பை உரிமம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மரணம், சுற்றுச்சூழல் விதிமீறல் (மைதானத்தில் குளிர்சாதன வசதி), ரசிகர்களுக்கு ஆடை கட்டுப்பாடு, காதலர்களுக்கு தடை என பல்வேறு மனித உரிமை மீறல்களை எதிர்கொண்டு ஒரு உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக ஒன்பது முக்கிய பிரச்சனைகளுடன் சிக்கி தவியாய் தவித்து வருகிறது கத்தார் நாடு. தற்போது சுவிஸ் அட்டர்னி ஜெனரலை உளவு பார்த்த விவகாரம் வேறு டாப் டிரெண்டிங் பிரச்சனையாக முளைத்துள்ளது. இந்த விவகாரம் உண்மை என்றால் கத்தார் கடுமையான சிக்கலை எதிர்கொள்ள வேண்டிருக்கும். காரணம் அட்டர்னி ஜெனரல் என்பவர் ஒருநாட்டின் அரசு சார்ந்த முக்கிய உறுப்பினர் ஆவார். அப்படிப்பட்ட ஒரு முக்கிய நபரை வேறு ஒரு நாடு பார்த்திருப்பதை சுவிஸ் அரசு சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது என்பதால் கத்தார் கூடுதல் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;