facebook-round

img

திடீரென பல்லாக்குத் தூக்குவதே பாவமெனச் சொன்னால் எங்கள் பாரம்பரியம் என்னாவது?

பல்லாக்கோடு பிறந்து வந்தோம் பிழைப்பு நடத்த;

அதைப் பாதியிலே பறிச்சிக்கிட்டா எப்படி வாழ?

பிறந்தபோதே பிரிட்டிஷாருக்கு பல்லாக்கு தூக்கினோம்.

பின்புபொருமுறை உடன்கட்டைக்கு பல்லாக்குத் தூக்கினோம்.

அவசரநிலைக் காலத்தில்

பல்லாக்குத் தூக்க தயாரென இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினோம்.

ஆட்சிக்கு வந்தபின்பு கார்ப்பொரேட்டுக்கு பல்லாக்கு தூக்குவதையே கடமையாக கொண்டிருக்கிறோம்.

அதானிக்கு பல்லாக்கு தூக்க அத்தனை மாநிலங்களையும் இருளில் தள்ளினோம்.

திடீரென பல்லாக்குத் தூக்குவதே பாவமெனச் சொன்னால் எங்கள் பாரம்பரியம் என்னாவது?

-இப்படிக்கு தேசபக்தி குத்தகைதாரர்.

Kanagaraj Karuppaiah

 

;