facebook-round

img

ஒரு போராட்டம் நடத்துவதால் என்ன குடி முழுகி போகும்? - உ.வாசுகி

காவல்துறை அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறோம் .. கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு இன்றைய தினம் டிஜிபி அலுவலக முற்றுகை aidwaவால் அறிவிக்கப்பட்டிருந்தது. மாதர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் வீட்டுக்கு நேற்று நள்ளிரவு சென்று போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என காவல்துறை மிரட்டுகிறது.. திருவள்ளூர் மாவட்ட செயலாளர் மோகனாவை இன்று காலை வீட்டில் இருந்து கிளம்பும்போது வீட்டு வாசலில் வைத்து கைது செய்து விட்டது. ஸ்ரீமதியின் தாயார் சென்னையில் எங்கே இருக்கிறார் என சல்லடை போட்டு தேடிக்கொண்டிருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து செய்யப்பட்டு இருந்த வாகன ஏற்பாடுகளை எல்லாம் வாகன உரிமையாளர்களை மிரட்டி ரத்து செய்ய வைத்து விட்டனர்.. சரி ரயிலில் கிளம்பலாம் என சிதம்பரத்தில் மாதர் சங்க உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் ரயில் நிலையம் சென்ற போது அவர்களோடு தகராறு செய்து ரயில் ஏறவிடாமல் காவல்துறை தடுத்து விட்டது. ஒரு போராட்டம் நடத்துவதால் என்ன குடி முழுகி போகும்? காவல்துறையின் இத்தகைய மோசமான நடவடிக்கைகள், ஸ்ரீமதி மரணத்தில் மேலும் மேலும் சந்தேகங்களை எழுப்புகின்றன... யாரையும் வரவிடாமல் தடுத்தாலும், பத்து பேரே மிஞ்சினாலும் சொன்னபடி போராட்டம் நடக்கும்...

;