facebook-round

img

வீட்டில் இருங்கள்...வீட்டில் இருங்கள்...

வீட்டில் இருங்கள்...
---------------------------------

வீட்டில் இருங்கள்...
வீட்டின் நலம் கருதி.
வீதியின் நலம் கருதி...
சுயநலம் கருதி...
பொதுநலம் கருதி...

வீட்டை விடவும்
பாதுகாப்பான இடம்
இப்போது
வேறொன்றுமில்லை...

கை கழுவுங்கள்..
இதைத் தவிர
தடுப்பு மருந்து
இப்போதைக்கு
வேறெதுவும் இல்லை.

இந்த முறை...
கைகழுவுதல்
கடமைக்கு கழுவுதல் அல்ல!
20 நொடிகள்
சோப்பு போட்டு
முறைப்படி கழுவுதல்!

அண்மையில்
வெளிநாடுகளில் இருந்து
வந்தவர்கள் / வந்துகொண்டு
இருப்பவர்கள் எல்லாம்
இரண்டு வாரம்
வீட்டிற்குள்
தனித்திருங்கள்...

இன்றைய சூழலில்
அது ஒன்றும்
அவ்வளவு பெரிய
'தியாகம்' இல்லை.
வரும்முன் காக்கும்‌
புரிதல் மட்டுமே!

உங்களின் நெருக்கம்
உங்களின்
அன்பிற்குரியவர்களை
அதிகம்
பாதிக்கலாம்.

அன்போடு
விலகியிருங்கள்.

நோய் அறிகுறிகள்
இல்லாதவர்கள்
முகமூடி அணிவதால்
பயனில்லை.
முகமூடிகளை
வீணாக்காதீர்கள்.

விழிப்புடன் இருங்கள்..
ஆனால்
பீதியடைய வேண்டாம்...

அடிப்படைத்தேவைகளில்
மட்டும்
கவனம் செலுத்துங்கள்...

கூட்டம் போடாதீர்கள்...

சிறியதே அழகு.

அனைவரின் நலம் விரும்புவோம்..

ஒத்துழைப்போம்.

அன்புடன்

ஆர்.பாலகிருஷ்ணன்
புவனேஸ்வரம்
16/03/2020

(ஒடிசாவில்
கொரோனா முன்னெச்சரிக்கை
பணிகளுக்கு இடையே
ஒரு சின்ன இடைவேளையில்).