facebook-round

img

அம்மாக்களை வலிமையாக மாற்றப் போகிறாராம்! - ஆர்.பத்ரி

'அம்மா வலிமையானால்
பாரதமாதா வலிமையாவாள்'
இந்த விளம்பரத்தை நமக்கு
காட்டிவிட்டு, அதானியை
வலிமையாக்கும் வேலையை
சிரமேற்கொண்டு செய்து 
கொண்டிருக்கிறார் மோடிஜீ..
மிக நீண்ட இந்திய கடலோர
எல்லைகளில் ஒவ்வொரு 500 கிமீ
இடைவெளியிலும் ஒரு பெரிய
அல்லது சிறிய துறைமுகங்கள்
அதானிக்கு சொந்தம்.
24% பயணிகள் 57% கார்கோ
போக்குவரத்து அதானிக்கு
சொந்தமான துறைமுகங்களின்
கட்டுப்பாட்டில் இருக்கிறது.
நிலக்கரி பரிவர்த்தனைகளில்
450 மில்லியன் டன் அதானி
சுரங்கங்களின் மூலமாகவே
கையாளப்படுகிறது.. 2018 ல் 
ஆறு விமானநிலைங்களை
தனியாருக்கு கொடுப்பது என
முடிவெடுத்த சூழலில் அந்த 6
விமான நிலையங்களையும்
கைப்பற்றினார் அதானி.
குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்காகவே கடலோர ஒழுங்குமுறை சட்டம் 1991
வனப்பாதுகாப்பு சட்டம் 1980 
ஆகியவை திருத்தப்பட்டுள்ளன..
சத்தீஷ்கர், மத்தியபிரதேசம் 
உள்ளிட்ட பல பகுதிகளில் 
காப்புக்காடுகள் சட்டங்கள்
உள்ளிட்ட பல சட்டங்களை
மீறியே அதானியின் சுரங்கள் 
செயல்பட்டுக் கொண்டிருக்கிறது
அதானி பென்ச் பவர் லீட் 
எனும் மின்சார உற்பத்தி 
நிறுவனத்திற்கு 31 கிராமங்களில் 
தாரை வார்க்கப்பட்டுள்ள
5607 ஹெக்டேர் நிலங்கள்
என பட்டியல் நீளமாக உள்ளது.
தனது அம்மாவை விட அதானியை
அதிகமாக நேசிக்கும் இந்த மனிதர்
நமது அம்மாக்களை வலிமையாக
மாற்றப் போகிறாராம்..
......பாவம் பாரதமாதாக்கள்...

-  ஆர்.பத்ரி. சிபிஎம்

;