facebook-round

img

பத்தாண்டுகளாக பாஜகவின் சாதனை என்ன தெரியுமா? - சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

முதல் சாதனை: உலகத்தில் தூய்மையான நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம், மகிழ்ச்சியடைய வேண்டாம், கடைசியில் இருந்து மூன்றாவது இடம். இந்தியாவிற்கு கீழே இருப்பது பாக்கிஸ்தானும், வங்கதேசமும்.

இரண்டாவது சாதனை: உலகில் உள்ள சின்ன/பெரிய நகரங்களின் பட்டியலில் மிகவும் மாசடைந்த நகரம் எது தெரியுமா? அந்த சாதனையையும் பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் பீகார் மாநிலத்தின் “பேகுசராய்தான்” பெற்றுள்ளது.

மூன்றாவது சாதனை: உலகத் தலைநகரங்களின் பட்டியலில் மிகவும் மாசடைந்த தலைநகரம் எது தெரியுமா?  வேறு எது, நம்ம் புதுதில்லிதான், அதுவும் சாதாரணமாக அல்ல, தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த சாதனையை தில்லி பெற்றுள்ளது,

நாங்க விஸ்வகுரு இல்லையா, இந்த பெருமையை வேறு எந்த தலைநகருக்கு விட்டுத் தரமுடியும்?

நான்காவது சாதனை: மிக மாசடைந்த 10 நகரங்களில் 9 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.

இவையெல்லாம் பூவுலகின் நண்பர்கள் எடுத்த ஆய்வு அல்ல, உலக காற்றின் தரம் குறித்த தரவுகளை வெளியிட்டு ஆய்வு செய்யும் ஸ்வீடன் நாட்டுச் சேர்ந்த IQAir நிறுவனம் வெளியிட்ட தரவு.