facebook-round

img

முட்டாள் அரசனும் சவுக்கடி தண்டனையும்

முட்டாள் அரசனும் சவுக்கடி தண்டனையும் 

அலங்கார உடையணிந்து
ஊர் ஊராக சுற்றும்
முட்டாள் அரசனுக்கு ஜோதிட
நம்பிக்கை மிக அதிகம்..
ஒரு நாள் ஆஸ்தான ஜோதிடன்
முட்டாள் அரசனிடம் சென்று,
' நாளை காலை ஏதேனும்
ஒரு மரத்தில் அருகருகே
இரண்டு காகங்கள் அமர்ந்து
இருப்பதை பார்த்தால் உமக்கு
எல்லாமே நல்லது நடக்கும்'..
என சொல்லிச் சென்றான்.
உடனே அரசன் தனது எல்லா
சேவகர்களையும் கூட்டி இந்த
தகவலை சொல்லி, அருகருகே
இரண்டு காகங்களை பார்த்தால்
உடனே அரண்மனைக்கு தகவல்
சொல்ல கேட்டுக்கொண்டான்.
மறுநாள் காலை ஒருமரத்தில்
அருகருகே இரண்டு காகங்கள் 
அமர்ந்திருந்ததை பார்த்த
சேவகன் ஒருவன் அரசனிடம்
தகவல் சொல்ல போனானாம்.
அவன் கொஞ்சம் வாயாடி என்பதால் 
போகும் வழியில் எல்லாரிடமும் பேசிக்கொண்டே போனதால் 
தாமதமாக சென்று
அரசனிடம் தகவலை சொன்னான்.
முட்டாள் அரசன் வந்து மரத்தை
பார்க்கும் போது இரண்டில்
ஒன்று பறந்து போய் ஒரே
காகம் மட்டுமே அமர்ந்திருந்தது.
ஒற்றை காகத்தை மட்டுமே
கண்டு மிகுந்த கோபமடைந்ததால்,
'என்னிடம் பொய் சொன்னதால்
உன்னை நீயே சவுக்கால் அடித்துக் 
கொள்ள வேண்டும், இதை
நாட்டு மக்கள் எல்லோரும்
பார்த்து மகிழ வேண்டும், இதுவே
உனக்கு தண்டனை'  என்று
சொன்னானாம் முட்டாள் அரசன்..

- நீதி -

மூடநம்பிக்கை ஜோதிடனையும்
பிற்போக்கு முட்டாள் அரசனையும் 
வாயாடும் சேவகனையும் கொண்ட
நாட்டில் மக்களுக்கு நிம்மதி ஏது..?

- ஆர்.பத்ரி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்