நேற்றிரவு பல்கலைகழக
வளாகம் புகுந்து
முகமூடி அணிந்து
என் மண்டையை
உடைத்தாய்,
வழக்கம் போல
வரலாற்று பக்கங்கள் நெடுக
கோழைத்தனமாக
காவி கருங்காலிகள்
செய்யும் செயல்போல...
என் தாய் வருடிய
என் தந்தை முத்தமிட்ட
உனக்கெதிராக சிந்திக்கும்
என் சிந்தனையை
உடைப்பதாய் நினைத்து...
இன்று மீண்டும்
களத்தில் நிற்கிறேன்
உன் நெஞ்சுறுதிக்கு
சாவால்விட்டு
முன்னிலும் கம்பீரமாய்!
அட பயித்தியகார கூட்டமே
ஒன்றை புரிந்துக்கொள்!
நீ
காலணி நக்கி பிழைத்த
சவார்கரரின் எச்சம்
நான்
தூக்குகயிற்றை முத்தமிட்ட
பகத்சிங் மிச்சம்
இறுதியில் நாங்களே வெல்வோம்
ஏனெனில்
வரலாறு அதையே சொல்கிறது
நாங்கள் மனிதம் நேசிப்பவர்கள்
எங்களுக்கு மரணம் இல்லை!
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு