election2021

img

கூட்டம் இல்லாததாலேயே மோடி, அமித்ஷா பிரச்சாரம் ரத்து..... கொரோனாவைக் காரணம் காட்டியது ஏமாற்று....

கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில், இம் முறை எப்படியும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று வெளியில் கூறிக்கொண்டாலும், நிலைமை அவ்வளவு நன்றாக இல்லை என்பது, பாஜகவினருக்கு உள் ளூற நன்றாகத் தெரியும். எனினும், மேற்குவங்க பாஜகதலைமையானது, மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஆதித்யநாத் என தங்கள் கட்சியின் தேசியத்தலைவர்களை தெருத்தெருவாக, சந்து சந்தாக அழைத்துச் சென்று வாக்குசேகரித்து வருகிறது. கொரோனா நெருக்கடியை உணர்ந்து, மேற்குவங்கத் தின் ஆளும் திரிணாமுல் துவங்கிஇடதுசாரிகள், காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் பிரச்சாரத்தை நிறுத்தினாலும் பிரதமர் மோடிமட்டும் பிரச்சாரத்தை கைவிடவில்லை. பின்னர் ஏனோ, திடீரென அவரும் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டார். கொரோனா பணிகளை அதற்காக காரணமாக காட்டினார்.

ஆனால், பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பிரச்சாரத்தை நிறுத்தியதற்கு உண்மையான காரணம் கொரோனா தடுப்புநல்லலெண்ணம் அல்ல; மாறாக,இவர்களின் பிரச்சாரங்களுக்கு கூட்டம் வராமல் போனதுதான்என்ற உண்மை வெளியாகியுள் ளது.மேற்கு வங்கச் சட்டப்பேரவைக்கான நான்காம் கட்டத் தேர்தலையொட்டி, ஹூக்ளி மாவட் டத்தில் மூன்று பிரச்சாரக் கூட் டங்களில் பேசுவதற்காக, வந்த பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, டோலிகஞ்ச் நிகழ்ச்சியோடு சரி, ஸ்ரீராம்பூர் மற்றும் சுன்ஞ்சுரா ஆகிய இடங்களுக்கு செல்லமறுத்து விட்டார். காரணம் சுமார்7 ஆயிரம் பேர் வருவார்கள் என்றுஎதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சியில் 500 பேர்கூட வரவில்லை. சேர்கள்அனைத்தும் காலியாகவே கிடந் தன. இதனால் எரிச்சலடைந்த அவர், ஹெலிகாப்டரில் பிரச் சனை என்று தில்லிக்கே திரும்பிச் சென்று விட்டார். இந்த நிலை, ஐந்தாம் கட்ட,ஆறாம் கட்ட பிரச்சாரத்திற்கு வந்த மோடி, அமித்ஷா ஆகியோருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனாலேயே மேற்கு வங்கத்தை விட்டு அவர்களும் இடத்தைக் காலி செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டங்களுக்குப் பதிலாக 6,300 இடங்களில் சிறிய கூட்டங்களைநடத்திக் கொள்ளுங்கள் என பாஜகவினருக்கு அமித் ஷா உத்தரவிட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

;