election2021

img

நீ எம்எல்ஏக்கு நிக்கிறேனு தெரிஞ்சதும் அப்புடி ஒரு சந்தோசமா இருந்துச்சு.... சிபிஎம் வேட்பாளர் சின்னத்துரை வாக்குச் சேகரிப்பு....

கந்தர்வக்கோட்டை:
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கந்தர்வக்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக எம்.சின்னத்துரை போட்டியிடு கிறார். சின்னத்துரையின் வெற்றிக்காக திமுக,காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, விசிக, முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் இரவு- பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

வேட்பாளரை அழைத்துக்கொண்டு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலையில் குன்றாண்டார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளத்துப்பட்டி, ரயில்வே கேட், உப்பிலியக்குடி, வாழமங்கலம், திருமலைராயபுரம், தென்னங்குடி, வத்தனாகுறிச்சி, வைத்தூர், ஆரணிப்பட்டி, மூட்டாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வாக்குச் சேகரித்தார். வேட்பாளருடன் முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆ.ராசேந்திரசோழன், ஒன்றியப் பெருந்தலைவர் கே.என்.ஆர்.போஸ், திமுக ஒன்றியச் செயலாளர் ஓ.எஸ்.வெங்கடாஜலம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.தங்கவேல், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பீமராஜ் உள்ளிட் டோர் உடன் சென்றனர்.சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் வேட்பாளர் சின்னத்துரைக்கு சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும், திருஷ்டி கழித்தும் ஆண்களும், பெண்களும் உற்சாகவரவேற்பு அளித்தனர். பள்ளத்துப்பட்டியைச் சேர்ந்த ஒரு மூதாட்டி வேட்பாளரை உச்சி முகர்ந்து வரவேற்றுப் பேசுகையில், “அய்யா ராசா... எப்புடிய்யா இருக்கே! மனுச, மக்க பிரச்சனைக்காக எத்தனையோ முறை இந்தப் பக்கம் வந்துருக்க. எங்களோட ஒன்னுமண்ணா நின்னு இருக்கே. எங்களுக்காக போராடி இருக்கே. நீ எம்எல்ஏக்கு நிக்கிறேனு தெரிஞ்சதும் அப்புடி ஒரு சந்தோசமாஇருந்துச்சு. நாங்க இருக்கோம் தம்பி. நீங்கதான் வாரீங்க. சந்தோசமா போயிட்டு வாங்கணு” அந்த மூதாட்டி சந்தோசமா அனுப்பி வச்சாங்க.இப்படி வேட்பாளர் செல்லும் இடங்களில்எல்லாம் பொதுமக்கள் தரும் உற்சாக வரவேற்பு வேட்பாளர் சின்னத்துரையின் வெற்றியை உறுதி செய்கிறது.

;