india

img

திரிபுராவிற்கு நிதி வழங்குவீர்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்...

புதுதில்லி:
ஆர்எஸ்எஸ், பாஜக குண்டர்களால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள திரிபுரா மாநிலக் கட்சிக்கு நிதி வழங்குமாறு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

செப்டம்பர் 8 அன்று திரிபுரா மாநிலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் மற்றும் கட்சியின் முன்னணி ஊழியர்களின் வீடுகள் மாநிலம் முழுவதும் விரிவான அளவில் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டதைப் பார்த்தோம். இருபதுக்கும் மேற்பட்ட அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன, அடித்து நொறுக்கப்பட்டன. அகர்தலாவில் உள்ள மாநிலக்குழு அலுவலகம் கூட விட்டுவைக்கப்படவில்லை. அலுவலகங்கள் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னணி ஊழியர்களின் பல வீடுகளும் தீக்கிரை யாக்கப்பட்டன அல்லது அடித்து நொறுக்கப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நசுக்க வேண்டும், மக்கள் மத்தியில் அதன் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக குண்டர்கள் ஒருங்கிணைந்து இந்தத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள்.

பாசிசத்தனமான இந்தத் தாக்குதல்கள் ஜனநாயகத்தின் மீதான ஒரு தாக்குதலாகும். எதிர்க்கட்சிகளை நசுக்குவதற்கான ஒரு கொடூரமான முயற்சியாகும். இதுபோன்ற அராஜக உத்திகள் மூலமாக திரிபுராவில் கட்சியைப் பணிய வைத்திடமுடியாது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலக்குழுவிற்கும் அதன் துணிச்சலான அணியினருக்கும் ஒருமைப்பாட்டையும், ஆதரவையும் காட்டுவதற்கு இதுவே நேரமாகும்.திரிபுரா கட்சிக்கு நிதி வசூல் செய்வதற்காக மாபெரும் அளவில் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு, அனைத்துக் கட்சிக் கிளைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுக்கிறது.இவ்வாறு வசூலிக்கப்படும் தொகை திரிபுராவில் கட்சியின் மீது ஏவப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்கதலை எதிர்த்து முறியடிக்கக்கூடிய விதத்திலும், ஸ்தாபனத்தை வலுப்படுத்தும் விதத்திலும் அமைந்திட வேண்டும். வசூலிக்கப் படும் நிதி கீழ்க்கண்டவாறு அனுப்பப்பட வேண்டும்.

காசோலைகள்,

“Communist Party of India (Marxist)” என்று எழுதப்பட்டு, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

CPI(M) Central Committee office, 

A. K. Gopalan Bhawan, 

27-29 Bhai Vir Singh Marg, 

Gole Market, New Delhi – 110 001.

வங்கி மாற்று (Bank transfer) மூலம் அனுப்புகிறவர்கள் கீழ்க்கண்டவாறு அனுப்பிடலாம்:

Name: Communist Party of India (Marxist)

Name of Bank: Punjab & Sind Bank, Gole Market

A/c No. : 07621000004811

IFSC Code: PSIB0000762

;