election2021

img

மேற்குவங்கத்தில் திரிணாமுல் - அசாமில் பாஜக முன்னிலை.... அசாமில் ஒரு தொகுதியில் சிபிஎம் முன்னிலை....

கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல்  8 கட்டங்களாக நடைபெற்றது. இதில்  ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அணியும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகட்சிகள் தலைமையிலான அணியும் பாஜக அணியும் போட்டியிட்டன. 

தேர்தலில் பதிவான வாக்குகள்மே 2 ஞாயிறன்று எண்ணப்பட்டன. முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி ஆரம்பம் முதல் பின்னடைவிலே இருந்தார். நீண்ட நேர இழுபறி,கடும் போட்டிக்குப்பின் மம்தா பானர்ஜி வெற்றி என அறிவிக்கப்பட்டது. பின்னர் சில மணி நேரத்தில் திடீர் திருப்பமாக மம்தா பானர்ஜிதோல்வியடைந்தார். இதனால் அக்கட்சியினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.  பாஜக 78 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ்மற்றும் இடதுசாரி கட்சிகள் தலைமையிலான அணி 2 தொகுதிகளில் முன் னிலை பெற்றுள்ளது.

அசாம்
126 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் மே 2 அன்று எண்ணப்பட்டன. மாலை 5 மணிநிலவரப்படி காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் முன்னிலை பெற்றது.  ஐக்கிய ஜனநாயக முன்னணி 14 இடங்களிலும் அசாம் கணபரிசத் 12 இடங்களிலும் பாஜக 57 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

 சோர்போக் தொகுதியில் சிபிஎம் முன்னிலை
அசாம் மாநிலத்தில் சோர்போக் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இரவு 7.15 நிலவரத்தின்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மனோரஞ்சன் தாலுக்தார், 55,014 வாக்குகள் பெற்று 58.62 சதவீதத்துடன் முன்னிலை வகித்துள்ளார். எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சங் கர் சந்திரதாஸ் 33,030 வாக்குகள் பெற்று 35.19 சதவீதத்துடன் உள்ளார்.